Category Archives: திருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் )
திருச்சி அல்லூரில், அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ).
ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
திருச்சி அல்லூரில், அவதார்(சிவ )
சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் )
2008 -ஆம் வருடம். ஜூன் மாதம் . அல்லூரில் தங்கியிருந்தேன். 28 .06.2008 அன்று காலை 10 மணிக்கு, காத்தவராயன் B .E (Elect &communication-SASTRA university-ல் Final year 2008-ல் படித்து,முடித்துவிட்டு (TCS Chennai -ல் placement ) வேலைக்கான Order எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். என்னிடம் வந்து divine guidance கேட்டார். உடனே தியானத்தில் சென்றேன். அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் அருள் உரையை கூறினேன்.
“அடுத்த மாதம் ஜூலை 31 -க்குள் (2008 ) TCS ஆர்டர் வந்துவிடும் ” . தினமும் 108 தடவை “ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே “
(குரு மந்திரம் உபதேசம் செய்து ) என்று விசுவாசத்துடன் (FAITH) கண்டிப்பாக சொல்லவேண்டும் என்றேன். சரி என்று சொல்லி காத்தவராயன் என்னிடம் சேஷ விபூதி வாங்கி சென்றார்.
ஜூலை 24 -ம் தேதி வந்தார். TCS சென்னை -ல் இருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. “அதாவது, SASTRA placement -ல் வந்தவர்களுக்கு நவம்பர் 2008 -ல் தான், வேலைக்கான ஆர்டர் கிடைக்கும். அதுவும் RECESSION Period என்பதால், உறுதியாக சொல்ல முடியாது ” .
காத்தவராயனுக்கு கலக்கம்.” நீ எத்தனை முறை கேட்டாலும், ஜூலை 31 க்குள் ஆர்டர் வரும்“, என்று சேஷன் கூறுவதாக சொன்னேன். ஆனால் இனி 500 தடவை சேஷ மந்திரம் தினமும் சொல்ல வேண்டும் என்றேன் .
காத்தவராயன் மனமின்றி சென்றார்.
ஜூலை 30 -ம் தேதி, காத்தவராயன் மீண்டும் வந்தார். குருஜி, இன்று வேலைக்கான TCS ஆர்டர் வந்துள்ளது. பெங்களூர்-ல்
ஆகஸ்ட் 1 -ஆம் தேதி training . செப்டம்பர் 1 -ஆம் தேதி TCS சென்னை-யில் job -ல் சேரவேண்டும். சேஷன் சொன்னது போல
ரூ.20000 /- மாத சம்பளம், என்று காத்தவராயன் மகிழ்ச்சியுடன் சொன்னார். மேலும் அவர் சொன்னது- எனக்கு மட்டும் தான்
ஆர்டர் வந்துள்ளது. என் நண்பர்களுக்கு நவம்பருக்கு மேல் தான்.
இது அற்புதம் தானே! எப்படி?
1. காத்தவராயனின் பூர்வ கர்ம பலன். 2 . குருவின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு, அப்படியே செயல் படுத்தியது.
3 . குரு வாயிலாக குரு மந்திரம் (ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே) உபதேசம் பெற்றது.
4 . குரு, சிஷ்யனுக்காக, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் தினமும் பிரார்த்தனை செய்தது. 5.எல்லாவற்றிர்க்கும் மேலாக, சேஷனின் பரிபூரண அநுகிரஹம்.
எல்லா புகழும் சேஷனுக்கே!. நாம் அனைவரும் அவர் நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. சேஷன் சிவனின் அவதாரமல்லவா!