Daily Archives: March 30, 2010

சேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae


சேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.
எல்லாம் நாம் சேஷனின் மேல் வைத்திருக்கும் விசவாசத்தைப் (FAITH) பொறுத்தது.

2008 மார்ச் முதல் திருவண்ணாமலையில் நிரந்தரமாக, மஹான் விருப்பப்படி தங்கிவிட்டேன்.

ஒரு நாள், தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். குருஜி, என யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். திரு.சுந்தர் கூப்பிட்டார். கடந்த 2001ம் ஆண்டு ஒரு வருடம் அவதார் ஸ்ரீ சேஷனின் அழைப்பின் பேரில்தாமரை நகரில் திரு சுந்தர் வீட்டில் ஒரு பகுதியில் (portion) நான் தனிமையில் தியானம் செய்யவும் கிரி வலம் செய்யவும், வாடகைக்கு குடியிருந்தேன்.சுந்தருக்கு மூன்று குழந்தைகள். மூத்த குழந்தை பெயர் ராஜேஷ். 2001ல் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

சுந்தர் கூப்பிட்டு நலம் விசாரித்தார். அப்பொழுது சுந்தர் என்னிடம் கூறியதை இங்கு விவரிக்கிறேன்.

நீங்கள் 2002ல் காலி செய்து விட்டு, டெல்லி சென்று விட்டீர்கள். அதன் பின் ஒரு நாள் குடும்ப பிரச்சனை காரணமாக, மன அமைதி இல்லாமல் , தாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்று சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். திடீரென நறுமணம் வீசியது. மனதுக்குள் அமைதி வர ஆரம்பித்தது. சுமார் இரண்டு மணி நேரம் கழிந்தது. குடும்ப பிரச்சனைக்கு விடிவும் வந்தது. மனைவியிடம் சென்று நடந்ததை விவரித்தேன்.

அவருக்கு ஆச்சரியம். குருஜி சென்று ஆறு மாதம் ஆகியும் அங்கே மணம் வீசுகிறதா? அவர் இருக்கும் போது தானே அப்படி இருக்கும், என் ஆச்சரியப்பட்டு அவரும், அங்குவந்து உட்கார்ந்தார். அவருக்கும் அதே அநுபவம்.

குருவின் மஹிமை கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சத்குரு தியானம் செய்த இடத்தில் நாம் அமர்ந்து இருந்தாலே போதும். நமக்கு இறை அநுபவம் தானே கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். அன்று அதனை உணர்ந்தோம்.இன்னும் நிறைய சொல்ல வேண்டியது உள்ளது.வீட்டிற்கு வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்ய வேண்டும், என்று சுந்தர் கூறினார். சுந்தர் அப்போது தமிழ்நாடு பேருந்து(Bus) கார்ப்போரேசன்ல் திருவண்ணமலை டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சுந்தர் படித்தது
8 –
ம் வகுப்பு மட்டுமே .

அவர் வீடு சென்றோம். ராஜேஷ் (2008) அப்போது +2 பரீக்ஷைக்கு படித்துக்கொண்டிருந்தான். Revision testல் 1100/1200 வாங்கியிருந்தான். அவன் என்னிடம் சொன்னதை, சேஷ சமாஜம் உறுப்பினர்களுக்குஇங்கே கூறுகிறேன்.

ராஜேஷ் கூறுகிறான்.

2002 –ல், இந்த அனுபவத்திற்கு பிறகு நானும் இரவில், தாங்கள் தங்கியருந்த பகுதிக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன் . சிறிது நாளில், எனக்கு ஞாபக சக்தி (Memory Power) கூடியது. சேஷ மந்திரமும் சொல்லிக்கொண்டிருந்தேன். விளைவு ?

அதிக மதிப்பெண்கள் (Marks) கிடைத்தது. ஆகவே வாடகைக்கு அந்த பகுதியை விடக்கூடாது என முடிவு செய்தோம். இன்று தங்களைச் சந்திக்கிறேன். தினமும் அந்த பகுதியில் தான் படித்து வருகிறேன். அடுத்த வருடம் B.E., Mechanical-ல் இடம் கிடைக்க தாங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும், என்று ராஜேஷ் கேட்டான். உன் விருப்பப்படியே நடக்கும் என ஆசீர்வாதம் செய்தேன். பிறகு, காபி (coffee) குடித்து விட்டு , நான் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று விட்டேன்.

அன்று முதல் அவதார புருஷர் சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் தினம் என் பிராத்தனை தொடர்ந்தது.

பிறகு 2008- June முதல் october வரை, திருச்சி அல்லூரில் தங்கியிருந்தேன். july- முப்பதாம் தேதி, சுந்தரிடமிருந்து, காலை 8 மணிக்கு எனக்கு போன் வந்தது. குருஜி, ராஜேஷ்க்கு திருச்சி அண்ணா பொறியியல் (Anna Eng. College) கல்லூரியில் B.E.Mechanical course-ல் இடம் கிடைத்து விட்டது. தாங்கள் திருச்சியில் எங்கே இருக்கிறீர்கள்? என கேட்டார். பிறகு, தங்களின் பிராத்தனைக்கு நன்றி என கூறினார்.
அன்று இரவு சேஷனுக்கு, ராஜேஷ் சார்பில் அனந்த கோடி நமஸ்காரம் செய்தேன்.

ராஜேஷ்ன் விடா முயற்சியும், சேஷ மந்திரமும், குரு பக்தியும், குரு தன் சிஷ்யனுக்கு செய்த பிரார்த்தனைக்கும் வெற்றி கிடைத்தது. எதுவும், அவன் (Seshan-Incarnation of Shiva- Lord of universe.-Seshanum Shivanum one and same) அசைவில்லாமல் நடக்காது.

அது சேஷனின் வெற்றியே. நாம் எல்லோரும் அவர் (Incarnation of Shiva) நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. ராஜேஷ் இந்த வருடம்

B.E. 2nd year Exam முடிக்க வேண்டும்.

நன்றி. வணக்கம் . குருஜி. திருவண்ணாமலை. 28.03.2010.

%d bloggers like this: