Daily Archives: May 19, 2010

சேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (வயது: 95). மும்பை திரு. M. ராஜகோபால் அவர்களின் அம்மா. தற்போது மும்பையில் மகனுடன் வசிக்கிறார்.

அம்மா அவர்களுக்கு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளைப்பற்றி  சிறு வயது முதலே தெரியும். மகானின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இதுவரை சுமார் 50 தடவைகளுக்கு மேல் படித்துள்ளார்கள். ஆனால் சேஷ மந்திரம் 2003 ஆண்டு முதல் ஜெபித்து வருகிறார்கள்.

ஒரு சமயம் திரு.ராஜகோபால் அவர்களுக்கு உடம்பு சரியில்லை . நான்கே நாட்களில் ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கேஎன்ற நம் மகானின் மந்திரத்தை 45000 தடவை ஜெபித்தார்கள். மகன் பூரண குணம் அடைந்தார்.

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மேல் அவர் வைத்திருந்த விசுவாசத்தை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது. மேலும் சேஷ மந்திரம் ஜெபித்தால்
தன் மகன் குணம் அடைந்து விடுவார் என்ற அவரின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. தினமும் 2000 முறை சேஷ மந்திரம் சொல்கிறார்கள்.

இன்றும் தன் தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்கிறார் ! அம்மா அவர்கள் 100 வயதை பூர்த்தி செய்ய வேண்டும் என நாம்  சேஷனிடம் பிராத்தனை
செய்வோம்.

AMMA (SEETHALAKSHMI)

AMMA (SEETHALAKSHMI)

ஸ்ரீமதி சீதாலட்சுமி அம்மாள்.

Advertisements
%d bloggers like this: