Daily Archives: May 28, 2010

05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 June முதல் ஶ்ரீ குரு மகாதேவ் ஆணைப்படி, என் குடும்பத்தை  நாகர்கோவிலிலிருந்து கரூருக்கு மாற்றினேன் . கரூர் எனக்கு முற்றிலும் புதிய
ஊர். அங்கு குருவின் அனுக்ரகத்தால் ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் நேரில் வந்து பார்வையிட்டார். இது சிறிது காலம் தான் . பின் வேறு மாற்றம் ஏற்படும், அதை அப்போது சொல்கிறேன்என்றார்.

சில நாட்கள் தொழில்சாலையிலேயே தங்கிவிட்டார். பிராத்தனை மற்றும் தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.

தொழில் வெகு வேகமாக முன்னேறியது, குருவின் அனுக்ராகத்தால்.

வாரம் 2 முறை  நெரூர் சென்று 2 to 3 மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்வேன். தியானத்தின் உச்ச கட்டத்தில் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி உள்ளே இருந்து  வந்த சம்பக பூவின் வாசனையை அனுபவித்தேன்.


அப்போது ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள், மிகவும் மெதுவாக என்னோடு பேசுவது கேட்டது. “ராஜலிங்கம்,” உன் குடும்ப சோகம் நான் அறிவேன். அதனால் தான் உன் குரு என்னிடம் உன்னை அனுப்பியுள்ளார். கவலைப்படாதே.

உன் மனைவியின் மனநிலையை நான் சரி படுத்துகிறேன். சூன்யம் வைத்தோரை சுழல வைக்கிறேன். டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள். அவர்களால் உன் மனைவியை குணப்படுத்த முடியாது என்று தானே என்னிடம் வந்திருக்கிறாய்?
நல்லது. நம்பியவரை காத்திடுவான் சதாசிவம்என்று பேசினார்கள்.


குருவிடம் சொன்னேன். “சரிதான்என்றார்.

மனைவியும் மருந்து இல்லாமல் குணம் அடைந்து வந்தார்கள். தூக்க மாத்திரைகள் இல்லாமல் நன்றாக தூங்கினார்கள். எல்லாம் ஶ்ரீ குரு மகாதேவ் மற்றும் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  இருவரின் அனுக்ராகத்தாலே (By grace only and not by blessings).

இப்படி 150 தடவைக்கு மேல்  கரூரிலிருந்து  நெரூர் (14kms ) சென்றேன்.

1992 டிசம்பர். ஒரு பெரிய திருப்பம். என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் மிகவும் அதிர்ச்சியான உண்மையை (Truth is always shocking and bitter in taste) வெளியிட்டார்கள். ராஜலிங்கம், ” தொழிசாலையை இன்றோடு மூடிவிடு, உன் தேவைக்கு, சொத்துக்களை விற்று, அதில் குடும்பம் நடத்து“. இனி என்னை பார்க்க  வரவேண்டாம். நீ பலரின் துன்பங்களை போக்க பிறவி எடுத்து வந்திருக்கிறாய். என்னைக்காட்டிலும் மிக உயர்ந்த
நிலைக்கு வருவாய். ஆகவே ஒரு நாள் நீ திருவண்ணாமலைக்கு செல். அங்கே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றிக்கொள். அதுவே உனக்கு நிரந்தரம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எனக்கு கனவில் காட்சி தந்துள்ளார்கள். அவரே உன் பராத்பர மற்றும் பரமேஷ்டி குரு ஆவார். மற்றும் ஒரு குரு, பரம குருவாக வருவார். ஏற்றுக்கொள்“.

இப்படி சொல்லிவிட்டு ஸ்ரீ குருமஹதேவ் தன் ஆஷ்ரமம் சென்று விட்டார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி 6ல்


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

Advertisements

04.ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 ஜனவரி. ஆஞ்சநேயர் கோவில் கட்டட பணி ஆரம்பம். சிமெண்ட் தளங்கள்அமைத்து விட்டோம். அஷ்டபந்தன பிரதிஷ்டை & கும்பாபிஷேகம் நாள் குறிக்கப்பட்டது. 1991ம் வருஷம் பெப்ருவரி மாதம் நாலாம் தேதி காலை 4 to 6 மணி.

அன்று ஹஸ்த நக்ஷத்ரம்.


1991 Feb.4.
காலை 4 மணிக்கு  ஹோமம் ஆரம்பம். அடித்தளத்தில் 2 கோடி ஸ்ரீ ராமஜயம் பூர்த்தி செய்யப்பட்ட நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டு, தங்க தகட்டில் ஓம்அக்ஷரம் எழுதப்பட்டு, அதன் மேல் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் திரு உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறகு அபிஷேகம், அலங்காரம், etc விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஶ்ரீ ஆஞ்சநேயர் தலையில் நவரத்தினங்கள் வெள்ளி கிரீடம் சாற்றப்பட்டது. பிறகு வெள்ளி குண்டலங்கள்
ஶ்ரீ ஆஞ்சநேயர் காதுகளை அலங்கரித்தன. வடைமாலை சாற்றி ஆராதனை செய்தோம்.


பகல் 12 மணிக்கு 1500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஶ்ரீ குருவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, என்னிடம் சொன்னார்கள். எனக்கும் ஶ்ரீ குருவின் கனவை பூர்த்தி செய்ய ஆஞ்சநேயர் அருள் செய்தார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி -5 ல் ….

நன்றி. வணக்கம்..

குருஜி. திருவண்ணாமலை.

03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


ஶ்ரீ குரு மகாதேவிடம் வாக்கு கொடுத்து விட்டேன். ஆஞ்சநேயர்கோவில் கட்டவும், திருப்பணிகளுக்கும், Rs 1,50,000 நான் செய்த வியாபாரத்திலிருந்து எடுத்து வைத்தேன்.

1990 ஜூன் மாதம் முதல் வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஒருநாள் இரவு. என் தலையில் சிறு குழந்தையின் கை படுகிறதுஆனால் அந்த கைகளில் நிறைய மயிர் உள்ளது. சந்தேகமாக இருந்தது. சந்தேகம் தெளியும் வகையில் ஒரு குரல் கேட்டது. நான் ஆஞ்சநேயர், குழந்தை வடிவில் வந்து,என் கையால் உன்னை தொட்டு ஆசீர்வதித்தேன் என்று சொல்வது மிகத் தெளிவாக கேட்டது. அதுவரை நான் தூக்கத்தில்இருந்தேன் என்பது பிறகு  தெரிந்தது. கனவு கலைந்தது. அடுத்த நாள் ஸ்ரீ குருவிடம் சொன்னேன். அது ஆஞ்சநேயர் தான்என்று உறுதி செய்தார்கள்.

1990
டிசம்பர் : ஆஞ்சநேயர் சிலை உருவாகி விட்டது. “பாலாலயம்தொடங்கப்பட்டது. டிசம்பர் 30 ம் தேதி இரவு மீண்டும் ஒரு கனவு.ஆஞ்சநேயர் என் முன் நிற்கிறார். அவர் தலையை தொட்டு தொட்டு காட்டுகிறார். அவர் காதுகளை தொட்டு தொட்டு காட்டுகிறார்ஒன்றும் புரியவில்லை. அவர் தலை பளிச் பளிச் என்று மின்னுகிறது.

மறு நாள் காலை தேரூர் செல்கிறேன். குருஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார். என்ன? நேற்று ஆஞ்சநேயர் கனவில் வந்தாரா? என்று கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. ஸ்ரீ குருஜி, என்னிடம் சொன்னார். “உன் எதிரே, என் அருகில் இருக்கும் இவர் பெயர் ராமகிருஷ்ணன். நகை வியாபாரி. ஆஞ்சநேயர் அஷ்டபந்தன விழாவின் போது ஆஞ்சநேயருக்கு நவரத்தினங்கள் தருவதாக வேண்டிக்கொண்டிருக்கிறார்.உன் கனவில் வந்த ஆஞ்சநேயர் தலையை தொட்டதும், காதுகளை தொட்டதும் எதற்காக? ” என்றதும் மீண்டும் வியப்பில் ஆழ்ந்தேன். ஸ்ரீ குருஜிக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.

நீ ஆஞ்சநேயருக்கு கீரிடம் வெள்ளியில் செய். பளிச் பளிச்? கிரீடத்தில் ராமகிருஷ்ணன் தான் கொண்டுவரும் நவரத்தினங்களை பதித்து தருவார். காதுகளுக்கு குண்டலங்கள் உன்னிடம் கேட்கிறார்.அதையும் செய்து கொடு என்று சொல்லி கனவு காட்சிகளை விளக்கினார்கள். வெள்ளி குண்டலங்களில் ருத்ராக்ஷம் பொருத்திக்கொடு. ஆஞ்சநேயர் சிவ அம்சம்அல்லவா என்று ஸ்ரீ குருஜி மீண்டும் விளக்கம் அளித்தார்கள்.


இதன் தொடர்ச்சி பகுதி – 4 ல் …..


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

%d bloggers like this: