03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


ஶ்ரீ குரு மகாதேவிடம் வாக்கு கொடுத்து விட்டேன். ஆஞ்சநேயர்கோவில் கட்டவும், திருப்பணிகளுக்கும், Rs 1,50,000 நான் செய்த வியாபாரத்திலிருந்து எடுத்து வைத்தேன்.

1990 ஜூன் மாதம் முதல் வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஒருநாள் இரவு. என் தலையில் சிறு குழந்தையின் கை படுகிறதுஆனால் அந்த கைகளில் நிறைய மயிர் உள்ளது. சந்தேகமாக இருந்தது. சந்தேகம் தெளியும் வகையில் ஒரு குரல் கேட்டது. நான் ஆஞ்சநேயர், குழந்தை வடிவில் வந்து,என் கையால் உன்னை தொட்டு ஆசீர்வதித்தேன் என்று சொல்வது மிகத் தெளிவாக கேட்டது. அதுவரை நான் தூக்கத்தில்இருந்தேன் என்பது பிறகு  தெரிந்தது. கனவு கலைந்தது. அடுத்த நாள் ஸ்ரீ குருவிடம் சொன்னேன். அது ஆஞ்சநேயர் தான்என்று உறுதி செய்தார்கள்.

1990
டிசம்பர் : ஆஞ்சநேயர் சிலை உருவாகி விட்டது. “பாலாலயம்தொடங்கப்பட்டது. டிசம்பர் 30 ம் தேதி இரவு மீண்டும் ஒரு கனவு.ஆஞ்சநேயர் என் முன் நிற்கிறார். அவர் தலையை தொட்டு தொட்டு காட்டுகிறார். அவர் காதுகளை தொட்டு தொட்டு காட்டுகிறார்ஒன்றும் புரியவில்லை. அவர் தலை பளிச் பளிச் என்று மின்னுகிறது.

மறு நாள் காலை தேரூர் செல்கிறேன். குருஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார். என்ன? நேற்று ஆஞ்சநேயர் கனவில் வந்தாரா? என்று கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. ஸ்ரீ குருஜி, என்னிடம் சொன்னார். “உன் எதிரே, என் அருகில் இருக்கும் இவர் பெயர் ராமகிருஷ்ணன். நகை வியாபாரி. ஆஞ்சநேயர் அஷ்டபந்தன விழாவின் போது ஆஞ்சநேயருக்கு நவரத்தினங்கள் தருவதாக வேண்டிக்கொண்டிருக்கிறார்.உன் கனவில் வந்த ஆஞ்சநேயர் தலையை தொட்டதும், காதுகளை தொட்டதும் எதற்காக? ” என்றதும் மீண்டும் வியப்பில் ஆழ்ந்தேன். ஸ்ரீ குருஜிக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.

நீ ஆஞ்சநேயருக்கு கீரிடம் வெள்ளியில் செய். பளிச் பளிச்? கிரீடத்தில் ராமகிருஷ்ணன் தான் கொண்டுவரும் நவரத்தினங்களை பதித்து தருவார். காதுகளுக்கு குண்டலங்கள் உன்னிடம் கேட்கிறார்.அதையும் செய்து கொடு என்று சொல்லி கனவு காட்சிகளை விளக்கினார்கள். வெள்ளி குண்டலங்களில் ருத்ராக்ஷம் பொருத்திக்கொடு. ஆஞ்சநேயர் சிவ அம்சம்அல்லவா என்று ஸ்ரீ குருஜி மீண்டும் விளக்கம் அளித்தார்கள்.


இதன் தொடர்ச்சி பகுதி – 4 ல் …..


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on May 28, 2010, in 01. GURUJI with our ParamaGuru SRI GURU MAHADEV, 03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 and tagged . Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: