05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 June முதல் ஶ்ரீ குரு மகாதேவ் ஆணைப்படி, என் குடும்பத்தை  நாகர்கோவிலிலிருந்து கரூருக்கு மாற்றினேன் . கரூர் எனக்கு முற்றிலும் புதிய
ஊர். அங்கு குருவின் அனுக்ரகத்தால் ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் நேரில் வந்து பார்வையிட்டார். இது சிறிது காலம் தான் . பின் வேறு மாற்றம் ஏற்படும், அதை அப்போது சொல்கிறேன்என்றார்.

சில நாட்கள் தொழில்சாலையிலேயே தங்கிவிட்டார். பிராத்தனை மற்றும் தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.

தொழில் வெகு வேகமாக முன்னேறியது, குருவின் அனுக்ராகத்தால்.

வாரம் 2 முறை  நெரூர் சென்று 2 to 3 மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்வேன். தியானத்தின் உச்ச கட்டத்தில் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி உள்ளே இருந்து  வந்த சம்பக பூவின் வாசனையை அனுபவித்தேன்.


அப்போது ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள், மிகவும் மெதுவாக என்னோடு பேசுவது கேட்டது. “ராஜலிங்கம்,” உன் குடும்ப சோகம் நான் அறிவேன். அதனால் தான் உன் குரு என்னிடம் உன்னை அனுப்பியுள்ளார். கவலைப்படாதே.

உன் மனைவியின் மனநிலையை நான் சரி படுத்துகிறேன். சூன்யம் வைத்தோரை சுழல வைக்கிறேன். டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள். அவர்களால் உன் மனைவியை குணப்படுத்த முடியாது என்று தானே என்னிடம் வந்திருக்கிறாய்?
நல்லது. நம்பியவரை காத்திடுவான் சதாசிவம்என்று பேசினார்கள்.


குருவிடம் சொன்னேன். “சரிதான்என்றார்.

மனைவியும் மருந்து இல்லாமல் குணம் அடைந்து வந்தார்கள். தூக்க மாத்திரைகள் இல்லாமல் நன்றாக தூங்கினார்கள். எல்லாம் ஶ்ரீ குரு மகாதேவ் மற்றும் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  இருவரின் அனுக்ராகத்தாலே (By grace only and not by blessings).

இப்படி 150 தடவைக்கு மேல்  கரூரிலிருந்து  நெரூர் (14kms ) சென்றேன்.

1992 டிசம்பர். ஒரு பெரிய திருப்பம். என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் மிகவும் அதிர்ச்சியான உண்மையை (Truth is always shocking and bitter in taste) வெளியிட்டார்கள். ராஜலிங்கம், ” தொழிசாலையை இன்றோடு மூடிவிடு, உன் தேவைக்கு, சொத்துக்களை விற்று, அதில் குடும்பம் நடத்து“. இனி என்னை பார்க்க  வரவேண்டாம். நீ பலரின் துன்பங்களை போக்க பிறவி எடுத்து வந்திருக்கிறாய். என்னைக்காட்டிலும் மிக உயர்ந்த
நிலைக்கு வருவாய். ஆகவே ஒரு நாள் நீ திருவண்ணாமலைக்கு செல். அங்கே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றிக்கொள். அதுவே உனக்கு நிரந்தரம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எனக்கு கனவில் காட்சி தந்துள்ளார்கள். அவரே உன் பராத்பர மற்றும் பரமேஷ்டி குரு ஆவார். மற்றும் ஒரு குரு, பரம குருவாக வருவார். ஏற்றுக்கொள்“.

இப்படி சொல்லிவிட்டு ஸ்ரீ குருமஹதேவ் தன் ஆஷ்ரமம் சென்று விட்டார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி 6ல்


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

Advertisements

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on May 28, 2010, in 01. GURUJI with our ParamaGuru SRI GURU MAHADEV, 05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 and tagged . Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: