07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


This saint attained Jeeva samadhi at Nerur, a small village near Karur in Trichy district, Tamilnadu under the Bilva tree.


அவதார் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜீவா சமாதி வில்வ மரத்தின் (சிவப்பு பட்டு துணியால் சுற்றப்பட்டுள்ளது) அடியில் உள்ளது. வில்வ மரத்தின் முன்னே மண்ணால் உருவம் செய்து தலைக்கு கிரீடம் அலங்காரம். உடம்பு பகுதியில் பூ மாலை சாற்றப்பட்டுள்ளது. அதற்கு அபிஷேகம், அலங்காரம்நெய்வேத்தியம், ஆரத்தி அனுதினமும் காலை 8  to 9 க்குள். மாலை 5 to 6 க்குள்.

1993 –ஜூலை 15 ம் தேதி முதல் நெரூர் கைலாஷ் ஆஷ்ரமத்தில்தியானம் செய்ய தங்கினேன். 13 நாட்கள் தொடர்ந்து தங்கினேன். ஜூலை 27 –ம் தேதி அவதார் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் சமாதி முன்பு வழக்கம் போல் தியானத்தில் ஆழ்ந்து இருந்தேன். திடீரென சம்பக பூவின் நறுமணம் சுற்றிலும் வீசியது. சற்று நேரத்தில் ப்ரம்மேந்திராள் என்னிடம் பேசுவது கேட்டது.

என்னால் ஒன்றும் செய்யமுடியாது. உன் குரு சொன்னதை ஞாபகப்படுத்திப்பார். நீ உடனே திருவண்ணாமலை செல். உனக்கு எல்லாமே அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தான். அனுக்ரகம் தருகிறேன். காலம் தாழ்த்தாதே. செல். சேஷ பிரம்மம் .சதாசிவ பிரம்மமும் (பரமகுரு) சேஷ பிரம்மமும் ஒன்றே.


பிறகு கரூர் வந்து சேர்ந்தேன். 1993 ஜூலை 29 ம் தேதி சேலம் வந்து, அங்கிருந்து மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை பஸ்ல் அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு என் முதல் பயணம். அப்போது என் வயது 42 . மகன் கோகுல் (10 வயது), மனைவி ஜெயலக்ஷ்மி (37 வயது) இருவரையும் ஈரோடுல் தாயார் ( மனைவியின் அம்மா) வீட்டில் இருந்தார்கள். அன்று இரவு 9.30 –க்கு திருவண்ணாமலை வந்து சேர்ந்தேன். மறு நாள் 30.07.1993 காலை 5.30 க்கு என் வாழ்கையில் முதன் முறையாக திரு.அண்ணாமலையார் கோவிலில் நுழைகிறேன். அப்போது கோ பூஜை ஆரம்பம். பசுமாடு அண்ணாமலையாரைப் பார்த்து தலை வணங்கிய காட்சி அற்புதம். அண்ணாமலையார் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு அண்ணாமலையாரின் விஸ்வரூப தரிசனம் கண்டேன்.

ஶ்ரீ சேஷாத்ரி ஆஷ்ரமத்தில் , அவதார புருஷர் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதியை அடைந்தபோது காலை மணி 8.10. சாஷ்டாங்கமாய் விழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தேன். ஒரு பிரம்மத்திடமிருந்து (சதாசிவ) இனொரு பிரம்மத்திடம் (சேஷ) வந்து சேர்ந்தேன். பிறகு சமாதி முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டேன். தாமரை பூவின் நறுமணம் என் மனதை ஈர்த்தது. என் குருநாதர் ஸ்ரீ குரு மகாதேவ் சொன்னதை நினைவு படுத்திப் பார்த்தேன்.

ராஜலிங்கம், ஶ்ரீ சேஷாத்ரி சமாதியில் தாமரை பூ வாசனை கிடைத்தால், மகான் உன்னை ஏற்றுக்கொண்டார் என அர்த்தம். இல்லையென்றால் உன்னை கைவிட்டு விட்டார் என அர்த்தம்.என்று சொன்னது நினைவிற்கு வந்தது. என் குருவின் த்ரி கால ஞானத்தை எண்ணி வியப்பில் ஆழ்ந்தேன். தியானம் தொடர்ந்தது. மீண்டும் சமாதி உள்ளிருந்து மகான் குரல் : ஏன் இவ்வளவு கால தாமதமாக வந்திருக்கிறாய்? உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்“.

அன்று மாலை ப்ரம்மரிஷி மாதாஜி ஸ்ரீ உமாதேவியாரின் அநுக்ரகத்தையும்  பெற்றேன். ஶ்ரீ சதாசிவ பரம்மேந்திராள் சொன்னது என் நினைவிற்கு வந்தது.


(
எனக்கு இரண்டு பரமகுரு) இன்னும் ஒரு குரு கிடைப்பார் என்பதே அது. மானசீகமாக மாதாஜியை பரமகுருவாக ஏற்றுக்கொண்டேன். அவதார் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை (ஶ்ரீ குரு மகாதேவ் சொன்னது போல்) பரமேஷ்டி, பராத்பர குருவாக மானசீகமாக ஏற்றுக்கொண்டேன். அன்று  பின் இரவு 1.30 க்கு  முதன் முறையாக கிரி வலம்” (giri pradakshina) மேற்கொண்டேன். காலை 5 மணிக்கு கிரிவலம் முடிந்தது.

நன்றி.வணக்கம். குருஜி

திருவண்ணாமலை.
30th May 2010

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on May 30, 2010, in 01. GURUJI with our ParamaGuru SRI GURU MAHADEV, 07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 and tagged . Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: