Daily Archives: June 15, 2010

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார்.


கடந்த 12.06.2010. அன்று பகல் 12.15 மணிக்கு திருச்சி M .G .சதாசிவம் எனக்கு போன் செய்தார். தன்னுடைய email Id (mgsadasivam1948@gmail.com) மூலம்  மெயில் அனுப்பினால்  யாருக்குமே போய்ச்சேரவில்லை என மன வருத்தத்துடன் என்னிடம் போனில்  பேசினார். கடந்த 10 நாட்களாக இந்த பிரச்சனை.

சதாசிவம் சொன்னது:
“BSNL internet connection
வாங்கியிருக்கிறேன்.  BSNL officers , technicians எல்லோரும் வந்து என் System மற்றும் Modem இவைகளை check செய்தார்கள்.

அவர்களின் connection – ல் fault இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

உங்களின் system சரி பார்க்கவும் என்று கூறிவிட்டு போய்விட்டார்கள்.

நாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.  T.V.ல் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் பொது மக்கள் சார்பில் (on behalf of Public)  govt. செய்யும் தவறுகளை High court நீதிபதி   கவனத்துக்கு கொண்டுவர, வக்கீல்கள் அல்லது பொது ஜனம் யாராவது மனு (public litigation) செய்வார்கள். மனுவின் அவசரத்தை முன்னிட்டு, அந்த மனுவையே high court நீதிபதி, writ petition –ஆக (தனி writ petition தேவையில்லை) ஏற்றுக்கொண்டு, govt .க்கு show cause notice அனுப்புவார்கள்.

அப்படி ஒரு அனுபவம் 12 .06 .2010 . அன்று பகல் 12 .15 மணி  சுமாருக்கு நடந்தது. சதாசிவம் வருத்தப்பட்டு சொன்னதையே அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம், மனுவாக கொடுத்துவிட்டேன். அவரிடம் போனில் ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறு பக்கம் மகானிடம் சூக்ஷ்மத்தில் மனு கொடுத்துவிட்டேன். இது சதாசிவத்துக்கு தெரியாது.

அவதார்  சேஷ சிவன், என் மனுவை அப்படியே writ petition ஆக எடுத்துக்கொண்டார். உடனே உத்தரவும் (தீர்ப்பும்) சொல்லிவிட்டார். இதை அவரிடம் நான் சொல்லவில்லை. அனால் மகான் தீர்ப்பை மட்டும் கூறினேன்.” நீங்கள் புது email Id open செய்யுங்கள்” ,என்றேன். அவர் அதற்கு,  ” நியூ டெல்லியில்  உள்ள என் மகன் ஜம்புநாதனிடம் புது email Id open பண்ண
சொல்லியிருக்கிறேன் “, என்று சொன்னார். நான் மீண்டும், ” srirangamsadasivamsesha@ …..என்று
email Id
(
இது நீதிபதி மகான் என் மனுவை (guru ‘s prayer) ஏற்று, உடன் மின்னல் வேகத்தில் தீர்ப்பில் இந்த email ID யை சொன்னார்) வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். 10 நிமிடத்தில் கிடைத்துவிடும் என்றேன்.

அவர் சிரித்தார். வேறொன்றும் சொல்லவில்லை அவர். பிறகு phone switch off செய்து விட்டேன். சதாசிவம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் மஹான் அனுக்ரகத்தால் சொந்த flat –ல் குடியிருக்கிறார். சதாசிவம் நான் சொன்னதை செய்துவிட்டார் என்பது எனக்கு சூக்ஷ்மத்தில் தெரிந்து விட்டது. மகான் சொன்ன email Id அவருக்கு பலன் கொடுத்து விட்டது. நான் சிரித்துக்கொண்டேன். மகானுக்கு நன்றி சொல்லி விட்டேன் .

ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை, இது சம்பந்தமாக, இன்றுவரை. அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் புது email Id அவர் சிஸ்டம் மூலம் போய் சேர்ந்து விட்டாதாக மகான் என்னிடம் சொல்லி விட்டார். அவர் குறை எளிதில் தீர்க்கப்பட்டது, மகான் கருணையால்.Quick disposal by Mahan. சில நேரங்களில் கல்யாண விருந்தில் முக்கிய விருந்தாளியை நம் மறந்து விடுவோம்.


இன்று (15th JUNE 2010 ) காலை 7.30 க்கு  எனக்கு ஒரு email வந்தது . அனுப்பியவர் என் சிஷ்யர் மும்பை ஸ்ரீ M . ராஜகோபால். (வயது 52 ) . அதாவது, ” ஸ்வாமிஜி , எனக்கு(மும்பை ராஜகோபால் ), ஸ்ரீ M.G சதாசிவம் திருச்சி, ஒரு email அனுப்பியுள்ளார். அதில் அவரின் புது email iD – யை தெரிவித்துள்ளார்.
அது : srirangamsadasivamsesha@yahoo.in

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தன் தீர்ப்பை, சதாசிவம் அமல் படுத்தியதை, ராஜகோபால் மூலம் எனக்கு தெரிவித்து விட்டார். நீதிபதி அவதார் ஸ்ரீ சேஷ பிரம்மத்திற்கு, பக்தன் சார்பில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

SESHA= INCARNATION OF LORD OF UNIVERSE = SHIVA

சாதாரண விஷயத்திற்கு கூட  மகான் எப்படி உதவுகிறார் ?ஸ்ரீ சதாசிவம் குடும்பத்தினருக்கு கடந்த 1994 நவம்பர் முதல் அவதார் ஸ்ரீ சேஷாத்ரியின் அருளுரையை  வழங்கி வருகிறேன். அவர் குடும்பம் சீரும் சிறப்புமாக சிறந்து வாழ அவதார் சேஷாத்ரி பக்த சமாஜத்தின்சார்பாக எல்லோரும் வாழ்த்துவோம். M .G .Sadasivam new email Id :srirangamsadasivamsesha @yahoo .in
சிவசேஷன், தன் பெயரை, பக்தனுடன் email Id யிலும்  இணைத்துக்கொண்டுள்ளார்.

இதை சேஷனின் லீலை என்று தானே சொல்லவேண்டும்.

சேஷனும் பக்தர்களும்” verse: 84

(27th. October, 2009 – 3:02 p.m.)

http ://seshapaamaalaigal .wordpress .com

Composer : அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

பவழமல்லிப் பூக்களை,
பரப்ரம்மனாம்  சேஷனின் பொற்பாதங்களில்,
பணிவுடன் தூவி, உடன் சேஷ  பாமாலையும் பாடினால், பல அற்புதங்கள் நடந்திடுமே
சேஷ பக்தர்களின் வாழ்க்கையிலே!

To  know how our system functions, please click:
THE TWELVE COMMANDMENTS

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

Thank You
Yours Guruji
Thiruvannamalai.

15th June 2010.

%d bloggers like this: