சேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சேஷ லீலைகள்


2000 –
ல் நடந்தது. சென்னையில் திருமதி வரலக்ஷ்மி அம்மாள் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பக்தை. அப்போது அவர்களின் வயது 60. மகானிடம் 1987 முதல் அளவற்ற ஈடுபாடு. எனக்கு 1996 முதல் அறிமுகம். அடிக்கடி மகான் வாக்கு கேட்பார்கள் .

அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். ஒரு நாள் மகான்,தன் அருளுரையை
அவர்கள் வீட்டில் என் மூலம் தந்து கொண்டிருந்தார்கள்.


மகான் அருளுரை : அம்மாவைப்பார்த்து, “உன் மகனை ஒரு மாருதி கார் வாங்கச்சொல். ஆபீஸ் மற்றும் வெளியே செல்ல வசதியாக இருக்கும்.”

மகான் வாக்குப்படி மாருதி கார் 10 நாட்களில் வாங்கப்பட்டது. திருமதி. வரலக்ஷ்மி அம்மாள் மகனுக்கு, car driving கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அம்மாவுக்கு தைரியம் அதிகம். “நான் முதலில் driving கற்றுக்கொள்கிறேன்,” என்று என்னிடம் கூறினார்கள். அடுத்த நாள் காலையிலிருந்து training ஆரம்பம். 10 நாட்களில்  நன்கு கற்றுக்கு கொண்டார்கள். RTO officer  Driving செக் செய்து Driving licence
10
வருட காலத்திற்கு issue செய்து விட்டார்.

ஆனால் ஒன்று. சென்னை Adaiyar area வில் 2nd  gear –ல்  மட்டும் அம்மா
ஓட்டுவார்கள். அவ்வளவு பயம். கார் டிரைவர் ஏற்பாடாகியது. அனால் மகான் வாக்கு பலிக்க வேண்டும் என்பதற்காக  விடா முயற்சியுடன் Car driving license (60 வயதில்முதன் முறையாக) வாங்கியது, மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். மகான் வாக்கினை அப்படியே ஏற்று நடப்போம். அதில் திருத்தங்கள் செய்து வாக்கை வீணாக்க வேண்டாம். அதனால் என் தபஸ் மகிமை வீணாகிறது.

Composer :அவதார புருஷர், சித்த புருஷர்,ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.

Title : “சேஷா  கருணா சாகரா”


சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சிவனின் அவதாரம் நீயே !

பக்தர்களுக்கு சாரதியாய் வருபவரே
பார்த்தசாரதியின் மறு  உருவம் நீயே !
உன்னுள் சிவதாண்டவமும்உண்டு;
காமாக்ஷியின் கருணையும்  உண்டு !
சேஷா கருணா சாகரனே ……
மங்களம் தரும் மானிட தெய்வம்  நீயே
மலரின் மணத்தினை மாந்தர் மனதில் நிறுத்தி
மயங்க வைக்கும் மாயக்கூத்தனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .
சௌபாக்கியம் தரும் சௌந்தர வல்லியும் நீயே
அன்பினை அள்ளித்தரும் அபிராமியும் நீயே !
சேஷா கருணா சாகரனே ..
வரமளித்து  வற்றாத செல்வம் தரும் வாராஹியும் நீயே
தாயாய் வந்து தனி அன்பினைத் தரும்
தாயுமானவரும் நீயே !
வைத்தியராய் வந்து ஆயுளை நீடித்த
வைத்தீஸ்வரனும் நீயே !
சேஷா கருணா சாகரனே
சிறந்த செல்வங்களைத்தரும்
சியாமளா  கிருஷ்ணனும் நீயே !
மண் வளம் மாற்றிய
மஹா  திரிபுர சுந்தரியும் நீயே !
சேஷா கருணா சாகரனே
வாழைத்தோப்பினை வாழ வைத்த
வயலூரானும் நீயே !
குணம் குன்றாமல் குலம் காத்த
கோமளவல்லித் தாயும் நீயே !
சேஷ கருணா சாகரனே
குல தெய்வம் இதுஎன காட்டிய
குண சீலனும்  நீயே !
வேல் வாங்கி தன் பக்தனைக் காத்த
வேலவனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .
குருவாய் வந்து குண்டலினியைஎழுப்பிய
குருவாயுரப்பனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .


Advertisements

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on June 17, 2010, in சேஷ லீலைகள் - திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் and tagged , . Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: