“நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்” – ஸ்ரீ வேலு

ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள் துணை

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் துணை

என் சேஷ பக்த சமாஜத்திற்கு, என் முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் வாழ்க்கையில் நடந்த, நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துக்கொள்ள நான் சேஷனிடம் கடமை படுகிறேன். எனக்கு கஷ்டங்கள் வரும்போது மட்டும், நம் குரு மந்திரத்தை சொல்வதில்லை. இன்பம் வரும்போதும் சேஷனுக்கு நன்றி கூறுவேன்.

சேஷ மந்திரத்தின்பலனாக எனக்கு என் மொட்டார் தொழிலில் சில அதிசய நிகழ்ச்சிகளை, நம் குரு, என்கண்முன் செய்து காண்பித்துள்ளார்.

முதலில் எனக்கு, வண்டி owner”, என்ற அந்தஸ்த்தை கொடுத்தார். வண்டி வாங்க பண உதவிகளை கேட்ட இடமெல்லாம் தரவைத்தார்! இதற்காக எங்கள் குருஜிக்கும் சேஷனுக்கும் நன்றி!

இரண்டாவது. என் மோட்டார் புழுது அடையும் அந்த நேரத்தில், ஆபத் பாந்தவனாகவந்து; அதன் முழு விவரம் – எதை எப்படி சரிசெய்ய வேண்டும், பாட்ஸ் எங்கு கிடைக்கும், என்பதையும் தெளிவு செய்தார்!

மூன்றாவது. ஒரு தடவை, ‘பவர் ஸ்டியரிங்க்‘, ‘பம்ப்‘, என்கிற பாட்ஸ் எல்லாம்  உடைந்து விட்ட. புதிய பாட்ஸ் மிகப் பெரியத் தொகை. நான் சேஷ மகான் மந்திரத்தைசொல்லிக் கொண்டிருந்த நேரம், மஞ்சள் நிரத்தில் உள்ள வண்ண்த்துப்பூச்சி உருவம் கொண்ட நம் குருநாதர், என்னை வட்டமிட்டார். நான் அப்பொழுது உள்ளுணர்ந்தேன். வண்டியில், நல்ல நிலையில் உள்ள பழைய ஸ்டியரிங்க் ஒன்று இருந்ததைக் கண்டேன். அதை என் வாகனத்தில் மாற்றிநேன். இன்று வரை அந்த ஸ்டியரிங்க், சேஷன் அருளால் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கிறது! எங்கள் சேஷனுக்கும், குருநாதருக்கும் மிக்க நன்றி!

நான்காவது. “நோனி”, என்ற ஆரோக்யம் தரும் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யலாமா என்று குருநாதரிடம் அனுமதி கேட்டேன். “செய்“, என்று அவர் சன்னதியில், பூஜை நேரத்தில் சொன்னார். அன்றே (31 டிசம்பர், 2010) தொடர்ந்தேன். அன்று முதல் அது நல்ல் முறையில் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் சேஷனுக்கும், குருநாதருக்கும் மிக்க நன்றி!

ஐந்தாவது. 12 மார்ச் 2011, இரவு 9.30 மணி அளவில், என் காரில் ஒரு பெரியவர், சிறிய காயங்களுடன் அடிபட்டார். அந்த கிராம் மக்கள் கூடி விட்டார். எனக்கோ முன்பெல்லாம் கை, கால், முகம், நடுங்கும். அன்றோ எந்த நடுக்கமும் இல்லாமல், அந்த பெரியவரை காரில் உட்க்காரவைத்து, “GH செல்லலாம்“, என்றேன். “வேண்டாம், பக்கத்தில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் அழைத்துப் போன்றார். என் காரில் உள்ள கஸ்டமரும், “ஏன்? ஏன்?” என்று பதற்றம் கொள்ளாமல், அமைதியாக இருந்தார். மிகப் பொருமையாக கைய்யாண்ட டாக்டரும், என் மீது தவரில்லை என்று, முதலுதவிக்குண்டான தொகையையும் வேண்டாம்என்றார். என்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து காபாற்றினார், நம் சேஷன்! GH-ல் போலிஸ் பிரச்சனை இல்லாமல், ஆபத் பாந்தவராக வந்த என் சேஷனுக்கு என் மனமார்ந்த நன்றி! என் அன்பு குருநாதருக்கு மனமார்ந்த நன்றி!

இப்படிக்கு,

வேலு, திருவண்ணாமலை

“சேஷ பக்த ஸமாஜம்

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on August 1, 2013, in "நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்" - ஸ்ரீ வேலு. Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: