Category Archives: 01. GURUJI with our ParamaGuru SRI GURU MAHADEV

07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


This saint attained Jeeva samadhi at Nerur, a small village near Karur in Trichy district, Tamilnadu under the Bilva tree.


அவதார் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜீவா சமாதி வில்வ மரத்தின் (சிவப்பு பட்டு துணியால் சுற்றப்பட்டுள்ளது) அடியில் உள்ளது. வில்வ மரத்தின் முன்னே மண்ணால் உருவம் செய்து தலைக்கு கிரீடம் அலங்காரம். உடம்பு பகுதியில் பூ மாலை சாற்றப்பட்டுள்ளது. அதற்கு அபிஷேகம், அலங்காரம்நெய்வேத்தியம், ஆரத்தி அனுதினமும் காலை 8  to 9 க்குள். மாலை 5 to 6 க்குள்.

1993 –ஜூலை 15 ம் தேதி முதல் நெரூர் கைலாஷ் ஆஷ்ரமத்தில்தியானம் செய்ய தங்கினேன். 13 நாட்கள் தொடர்ந்து தங்கினேன். ஜூலை 27 –ம் தேதி அவதார் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் சமாதி முன்பு வழக்கம் போல் தியானத்தில் ஆழ்ந்து இருந்தேன். திடீரென சம்பக பூவின் நறுமணம் சுற்றிலும் வீசியது. சற்று நேரத்தில் ப்ரம்மேந்திராள் என்னிடம் பேசுவது கேட்டது.

என்னால் ஒன்றும் செய்யமுடியாது. உன் குரு சொன்னதை ஞாபகப்படுத்திப்பார். நீ உடனே திருவண்ணாமலை செல். உனக்கு எல்லாமே அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தான். அனுக்ரகம் தருகிறேன். காலம் தாழ்த்தாதே. செல். சேஷ பிரம்மம் .சதாசிவ பிரம்மமும் (பரமகுரு) சேஷ பிரம்மமும் ஒன்றே.


பிறகு கரூர் வந்து சேர்ந்தேன். 1993 ஜூலை 29 ம் தேதி சேலம் வந்து, அங்கிருந்து மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை பஸ்ல் அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு என் முதல் பயணம். அப்போது என் வயது 42 . மகன் கோகுல் (10 வயது), மனைவி ஜெயலக்ஷ்மி (37 வயது) இருவரையும் ஈரோடுல் தாயார் ( மனைவியின் அம்மா) வீட்டில் இருந்தார்கள். அன்று இரவு 9.30 –க்கு திருவண்ணாமலை வந்து சேர்ந்தேன். மறு நாள் 30.07.1993 காலை 5.30 க்கு என் வாழ்கையில் முதன் முறையாக திரு.அண்ணாமலையார் கோவிலில் நுழைகிறேன். அப்போது கோ பூஜை ஆரம்பம். பசுமாடு அண்ணாமலையாரைப் பார்த்து தலை வணங்கிய காட்சி அற்புதம். அண்ணாமலையார் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு அண்ணாமலையாரின் விஸ்வரூப தரிசனம் கண்டேன்.

ஶ்ரீ சேஷாத்ரி ஆஷ்ரமத்தில் , அவதார புருஷர் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதியை அடைந்தபோது காலை மணி 8.10. சாஷ்டாங்கமாய் விழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தேன். ஒரு பிரம்மத்திடமிருந்து (சதாசிவ) இனொரு பிரம்மத்திடம் (சேஷ) வந்து சேர்ந்தேன். பிறகு சமாதி முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டேன். தாமரை பூவின் நறுமணம் என் மனதை ஈர்த்தது. என் குருநாதர் ஸ்ரீ குரு மகாதேவ் சொன்னதை நினைவு படுத்திப் பார்த்தேன்.

ராஜலிங்கம், ஶ்ரீ சேஷாத்ரி சமாதியில் தாமரை பூ வாசனை கிடைத்தால், மகான் உன்னை ஏற்றுக்கொண்டார் என அர்த்தம். இல்லையென்றால் உன்னை கைவிட்டு விட்டார் என அர்த்தம்.என்று சொன்னது நினைவிற்கு வந்தது. என் குருவின் த்ரி கால ஞானத்தை எண்ணி வியப்பில் ஆழ்ந்தேன். தியானம் தொடர்ந்தது. மீண்டும் சமாதி உள்ளிருந்து மகான் குரல் : ஏன் இவ்வளவு கால தாமதமாக வந்திருக்கிறாய்? உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்“.

அன்று மாலை ப்ரம்மரிஷி மாதாஜி ஸ்ரீ உமாதேவியாரின் அநுக்ரகத்தையும்  பெற்றேன். ஶ்ரீ சதாசிவ பரம்மேந்திராள் சொன்னது என் நினைவிற்கு வந்தது.


(
எனக்கு இரண்டு பரமகுரு) இன்னும் ஒரு குரு கிடைப்பார் என்பதே அது. மானசீகமாக மாதாஜியை பரமகுருவாக ஏற்றுக்கொண்டேன். அவதார் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை (ஶ்ரீ குரு மகாதேவ் சொன்னது போல்) பரமேஷ்டி, பராத்பர குருவாக மானசீகமாக ஏற்றுக்கொண்டேன். அன்று  பின் இரவு 1.30 க்கு  முதன் முறையாக கிரி வலம்” (giri pradakshina) மேற்கொண்டேன். காலை 5 மணிக்கு கிரிவலம் முடிந்தது.

நன்றி.வணக்கம். குருஜி

திருவண்ணாமலை.
30th May 2010

06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் சமாதி கோவில்

நுழைவு வாயில்.ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்.


கைலாஷ் ஆஷ்ரமத்தில் தமிழிலில், ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராளின் வாழ்க்கை சரித்திர புத்தகம் வெளியிட்டிருந்தார்கள். ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்கள் இயற்றிய தெலுகு கீர்த்தனைகள் 20 பாடல்கள்   இடம் பெற்றுள்ளன. (ப்ரம்மம் இயற்றிய அனேக கீர்த்தனைகள் கால போக்கில் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது) அதில் என்னைக்கவர்ந்தது, மானச சஞ்சரரே என்று தொடங்கும்  பாடல். இதை தொடர்ந்து பலமுறை பாடும்போது கண்களில் நீர் வழிந்து விடும். ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து பிரம்மம் பாடியிருக்கிறார். ஶ்ரீ கிருஷ்ணா அவதார புருஷர். ஶ்ரீ சதாசிவ பிரம்மமும் ஒரு அவதார புருஷர். பிரம்மம் பிரம்மத்தை பாடியது வியப்பில்லையே.


This saint attained Jeeva samadhi at Nerur, a small village near Karur in Trichy district, Tamilnadu under the bilva Bilva

அவதார் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜீவா சமாதி வில்வ மரத்தின் (சிவப்பு பட்டு துணியால் சுற்றப்பட்டுள்ளது) அடியில் உள்ளது. வில்வ மரத்தின் முன்னே மண்ணால் உருவம் செய்து தலைக்கு கிரீடம் அலங்காரம். உடம்பு பகுதியில் பூ மாலை சாற்றப்பட்டுள்ளது. அதற்கு அபிஷேகம், அலங்காரம்,நெய்வேத்தியம், ஆரத்தி அனுதினமும் காலை 8  to 9 க்குள் . மாலை 5 to 6 க்குள்.

சமாதி முன்  அமர்ந்தவுடன் இந்த  பாடலை சாமாராகத்தில் பாடிவிட்டு, தியானத்தில் ஆழ்ந்து விடுவேன். மீண்டும் உலக நிலைக்கு வர 2 to 3 மணி நேரம் ஆகும். அப்படி ஒரு பரவச நிலை ஏற்படும் (ecstasy ). வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும். பிரம்மம் அவர்கள் இயற்றிய மற்ற பாடல்களில் ப்ருஹி முஹுந்தேதி“, “பிபரே ராம ரசம்“, “கேலதி மம ஹிருதயே” “ஸர்வம் பிரம்ம மயம் ரே ரே..  “ஸ்திரதா நஹி நஹி ரே“, “ஆனந்த பூர்ண போதம்”  “ஸ்மர வாரம் வாரம் சேதக…” போன்ற பாடல்கள் எனக்கு  மிகவும் பிடித்த பாடல்கள்.


மானச சஞ்சரரேபாடல் பல இசை மேதைகளால் பாடப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகள் மூலம் பாடியிருக்கிறார்கள்.

அதை இங்கு You Tube-ல்  நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

 

Listen to Neyveli Santhanagopal’s rendition of

“Manasa Sanchara Re”

(Margazhi Uthsavam, 2008)

Manasa Sancharare

Ragam: Saama (28th melakartha janya)

Talam: Adi

Composer: Sri Sadashiva Bramhendral

Pallavi:

Maanasa Sancharare Brahmani Maanasa Sancharare

Charanam 1:

Madashikhi Pincchaalankruta Chikure

Mahaneeya Kapola Vijitamukure

Charanam 2:

Shree Ramani Kucha Durga Vihaare

Sevaka Jana Mandira Mandaare

Charanam 3:

Paramahamsa Mukha Chandrachakore

Paripoorita Muraliravadhare

Meaning:

Oh, Mind (“maanasa”) ! Undertake your pilgrimage (“sancharare”) in the Brahmam !

May the hairlock of Brahma (“madashiki”), meditated upon by you, be adorned (“alankrutha”) with the plumes of an exhilarated peacock (“chikure”) !

The cheeks (“mukure”) of the Supreme One (“mahaneeya”) outwit (“vijita”) the brightness of a mirror (“kapola”) !

He sports (“vihare”) around with (“durga”) Mahalakshmi (“sriramani”)! For his devotees (“sevaka”), He is a Kalpavriksha (“mandaare”) in the court yard (“mandira”)! Supreme (“parama”) ascetics (“hamsa”) delight in that face-moon (“mukha-chandra”) as a partridge bird (“chakore”)!

Oh, Mind! May your pilgrimage be in this Brahma that fills (“paripooritha”) the whole Universe with the flow of the music from His flute (“muraliravadhare”) !


இதன் தொடர்ச்சி பகுதி 6 A ல் ….

நன்றி .வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 June முதல் ஶ்ரீ குரு மகாதேவ் ஆணைப்படி, என் குடும்பத்தை  நாகர்கோவிலிலிருந்து கரூருக்கு மாற்றினேன் . கரூர் எனக்கு முற்றிலும் புதிய
ஊர். அங்கு குருவின் அனுக்ரகத்தால் ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் நேரில் வந்து பார்வையிட்டார். இது சிறிது காலம் தான் . பின் வேறு மாற்றம் ஏற்படும், அதை அப்போது சொல்கிறேன்என்றார்.

சில நாட்கள் தொழில்சாலையிலேயே தங்கிவிட்டார். பிராத்தனை மற்றும் தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.

தொழில் வெகு வேகமாக முன்னேறியது, குருவின் அனுக்ராகத்தால்.

வாரம் 2 முறை  நெரூர் சென்று 2 to 3 மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்வேன். தியானத்தின் உச்ச கட்டத்தில் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி உள்ளே இருந்து  வந்த சம்பக பூவின் வாசனையை அனுபவித்தேன்.


அப்போது ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள், மிகவும் மெதுவாக என்னோடு பேசுவது கேட்டது. “ராஜலிங்கம்,” உன் குடும்ப சோகம் நான் அறிவேன். அதனால் தான் உன் குரு என்னிடம் உன்னை அனுப்பியுள்ளார். கவலைப்படாதே.

உன் மனைவியின் மனநிலையை நான் சரி படுத்துகிறேன். சூன்யம் வைத்தோரை சுழல வைக்கிறேன். டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள். அவர்களால் உன் மனைவியை குணப்படுத்த முடியாது என்று தானே என்னிடம் வந்திருக்கிறாய்?
நல்லது. நம்பியவரை காத்திடுவான் சதாசிவம்என்று பேசினார்கள்.


குருவிடம் சொன்னேன். “சரிதான்என்றார்.

மனைவியும் மருந்து இல்லாமல் குணம் அடைந்து வந்தார்கள். தூக்க மாத்திரைகள் இல்லாமல் நன்றாக தூங்கினார்கள். எல்லாம் ஶ்ரீ குரு மகாதேவ் மற்றும் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  இருவரின் அனுக்ராகத்தாலே (By grace only and not by blessings).

இப்படி 150 தடவைக்கு மேல்  கரூரிலிருந்து  நெரூர் (14kms ) சென்றேன்.

1992 டிசம்பர். ஒரு பெரிய திருப்பம். என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் மிகவும் அதிர்ச்சியான உண்மையை (Truth is always shocking and bitter in taste) வெளியிட்டார்கள். ராஜலிங்கம், ” தொழிசாலையை இன்றோடு மூடிவிடு, உன் தேவைக்கு, சொத்துக்களை விற்று, அதில் குடும்பம் நடத்து“. இனி என்னை பார்க்க  வரவேண்டாம். நீ பலரின் துன்பங்களை போக்க பிறவி எடுத்து வந்திருக்கிறாய். என்னைக்காட்டிலும் மிக உயர்ந்த
நிலைக்கு வருவாய். ஆகவே ஒரு நாள் நீ திருவண்ணாமலைக்கு செல். அங்கே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றிக்கொள். அதுவே உனக்கு நிரந்தரம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எனக்கு கனவில் காட்சி தந்துள்ளார்கள். அவரே உன் பராத்பர மற்றும் பரமேஷ்டி குரு ஆவார். மற்றும் ஒரு குரு, பரம குருவாக வருவார். ஏற்றுக்கொள்“.

இப்படி சொல்லிவிட்டு ஸ்ரீ குருமஹதேவ் தன் ஆஷ்ரமம் சென்று விட்டார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி 6ல்


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

04.ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 ஜனவரி. ஆஞ்சநேயர் கோவில் கட்டட பணி ஆரம்பம். சிமெண்ட் தளங்கள்அமைத்து விட்டோம். அஷ்டபந்தன பிரதிஷ்டை & கும்பாபிஷேகம் நாள் குறிக்கப்பட்டது. 1991ம் வருஷம் பெப்ருவரி மாதம் நாலாம் தேதி காலை 4 to 6 மணி.

அன்று ஹஸ்த நக்ஷத்ரம்.


1991 Feb.4.
காலை 4 மணிக்கு  ஹோமம் ஆரம்பம். அடித்தளத்தில் 2 கோடி ஸ்ரீ ராமஜயம் பூர்த்தி செய்யப்பட்ட நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டு, தங்க தகட்டில் ஓம்அக்ஷரம் எழுதப்பட்டு, அதன் மேல் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் திரு உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறகு அபிஷேகம், அலங்காரம், etc விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஶ்ரீ ஆஞ்சநேயர் தலையில் நவரத்தினங்கள் வெள்ளி கிரீடம் சாற்றப்பட்டது. பிறகு வெள்ளி குண்டலங்கள்
ஶ்ரீ ஆஞ்சநேயர் காதுகளை அலங்கரித்தன. வடைமாலை சாற்றி ஆராதனை செய்தோம்.


பகல் 12 மணிக்கு 1500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஶ்ரீ குருவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, என்னிடம் சொன்னார்கள். எனக்கும் ஶ்ரீ குருவின் கனவை பூர்த்தி செய்ய ஆஞ்சநேயர் அருள் செய்தார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி -5 ல் ….

நன்றி. வணக்கம்..

குருஜி. திருவண்ணாமலை.

03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


ஶ்ரீ குரு மகாதேவிடம் வாக்கு கொடுத்து விட்டேன். ஆஞ்சநேயர்கோவில் கட்டவும், திருப்பணிகளுக்கும், Rs 1,50,000 நான் செய்த வியாபாரத்திலிருந்து எடுத்து வைத்தேன்.

1990 ஜூன் மாதம் முதல் வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஒருநாள் இரவு. என் தலையில் சிறு குழந்தையின் கை படுகிறதுஆனால் அந்த கைகளில் நிறைய மயிர் உள்ளது. சந்தேகமாக இருந்தது. சந்தேகம் தெளியும் வகையில் ஒரு குரல் கேட்டது. நான் ஆஞ்சநேயர், குழந்தை வடிவில் வந்து,என் கையால் உன்னை தொட்டு ஆசீர்வதித்தேன் என்று சொல்வது மிகத் தெளிவாக கேட்டது. அதுவரை நான் தூக்கத்தில்இருந்தேன் என்பது பிறகு  தெரிந்தது. கனவு கலைந்தது. அடுத்த நாள் ஸ்ரீ குருவிடம் சொன்னேன். அது ஆஞ்சநேயர் தான்என்று உறுதி செய்தார்கள்.

1990
டிசம்பர் : ஆஞ்சநேயர் சிலை உருவாகி விட்டது. “பாலாலயம்தொடங்கப்பட்டது. டிசம்பர் 30 ம் தேதி இரவு மீண்டும் ஒரு கனவு.ஆஞ்சநேயர் என் முன் நிற்கிறார். அவர் தலையை தொட்டு தொட்டு காட்டுகிறார். அவர் காதுகளை தொட்டு தொட்டு காட்டுகிறார்ஒன்றும் புரியவில்லை. அவர் தலை பளிச் பளிச் என்று மின்னுகிறது.

மறு நாள் காலை தேரூர் செல்கிறேன். குருஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார். என்ன? நேற்று ஆஞ்சநேயர் கனவில் வந்தாரா? என்று கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. ஸ்ரீ குருஜி, என்னிடம் சொன்னார். “உன் எதிரே, என் அருகில் இருக்கும் இவர் பெயர் ராமகிருஷ்ணன். நகை வியாபாரி. ஆஞ்சநேயர் அஷ்டபந்தன விழாவின் போது ஆஞ்சநேயருக்கு நவரத்தினங்கள் தருவதாக வேண்டிக்கொண்டிருக்கிறார்.உன் கனவில் வந்த ஆஞ்சநேயர் தலையை தொட்டதும், காதுகளை தொட்டதும் எதற்காக? ” என்றதும் மீண்டும் வியப்பில் ஆழ்ந்தேன். ஸ்ரீ குருஜிக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.

நீ ஆஞ்சநேயருக்கு கீரிடம் வெள்ளியில் செய். பளிச் பளிச்? கிரீடத்தில் ராமகிருஷ்ணன் தான் கொண்டுவரும் நவரத்தினங்களை பதித்து தருவார். காதுகளுக்கு குண்டலங்கள் உன்னிடம் கேட்கிறார்.அதையும் செய்து கொடு என்று சொல்லி கனவு காட்சிகளை விளக்கினார்கள். வெள்ளி குண்டலங்களில் ருத்ராக்ஷம் பொருத்திக்கொடு. ஆஞ்சநேயர் சிவ அம்சம்அல்லவா என்று ஸ்ரீ குருஜி மீண்டும் விளக்கம் அளித்தார்கள்.


இதன் தொடர்ச்சி பகுதி – 4 ல் …..


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


அப்போது நாகர்கோவிலில் குடியிருந்தேன். வாரம் இரண்டு நாட்கள்குடும்பத்துடன் தேரூரில் உள்ள  ஶ்ரீ குரு மகாதேவ் ஆஷ்ரமம் சென்று விடுவேன்.
கவிமணிஆஷ்ரமத்தில் அழகிய மணவாள கணபதிகோவில் உண்டு. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஶ்ரீ குரு மகாதேவுக்கு அன்றைய வயது சுமார் 70. பிரமச்சாரி. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். ஆஞ்சநேயர் சிலை ஐம் பொன்னால் ஆனது. சிறியது. ஆஞ்சநேயர் பஜனை நடக்கும். ஶ்ரீ குரு மகாதேவ் ஆஞ்சநேயராக மாறி வாக்கு சொல்வார்கள்.

1990 ம் ஆண்டு, என்னிடம், ஶ்ரீ குரு மகாதேவ் தன் விருப்பத்தை வெளியிட்டார்கள். ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி கட்டவேண்டும். கற்சிலையால் 3 to  3 1 /2 அடி உயரத்திற்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். ஆஷ்ரமத்தில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும். எல்லாம் 1 to 1.50 லக்ஷம் செலவு ஆகும்.ஏற்கனவே நீ, அடமானத்தில் இருந்த ஆஷ்ரமத்திற்குசொந்தமான 3 ஏக்கர் நன்செய் நிலத்தை Rs. 30, கொடுத்துமீட்டுவிட்டாய். அதற்கு நன்றி.

அது தவிர ஆஷ்ரம மாதந்திர மளிகை சாமான்களுக்கு Rs 3000 தருகிறாய். ஆஞ்சநேயர் கோவில் நீ தான் கட்ட வேண்டும். வேறு யார் யாரோ கேட்டார்கள். உனக்குத்தான் ஆஞ்சநேயர் அனுமதி கொடுத்தார். உன் குடும்பம் பிற்காலத்தில் செழிப்புடன் திகழும். நீ முடிவுசெய்து, எனக்கு சொல் என்றார்கள்.

குருவின் விருப்பமே என் முடிவு என்றேன்.

இதன் தொடர்ச்சி பகுதி-3 ல் …..

நன்றி.வணக்கம்.

குருஜி.திருவண்ணாமலை.

ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


தேரூர் (Theroor): ஶ்ரீ குரு மகாதேவ் (என் குரு)

நாகர்கோவில் தேரூர் 6 கி.மீ

(Nagerkovil to Theroor – 6 kms) Kanyakumari district


என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் (தத்தாத்ரேயர் குரு பரம்பரை) ஒரு பெரிய மகான். ஶ்ரீ வித்யா உபாசகர். ஶ்ரீ ஆஞ்சநேய உபாசகர். அம்பாள் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி உபாசகர். அவர் ஆஷ்ரமம் கன்னியாகுமரி மாவட்டம், சுசிந்தரம் தாணுமால்அயன் (அதாவது பிரம்மாவிஷ்ணுசிவன் ) கோவிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. “கவிமணி இல்லம் என்று பெயர். ஊர் பெயர் தேரூர்.அந்த ஊர் பறவைகள் சரணாலயம். பெரிய ஏரி (lake) உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் நெல் வயல்களே. சுற்றிலும் மலைகள்.இது ஒரு  அழகிய கிராமம். வாழை தோட்டங்கள் நிறைய உண்டு. சிறு குளங்கள் நிறைய உண்டு. கவிமணிபுத்தக சாலை அங்கு உண்டு. 10000 புத்தகங்கள் அடங்கியது.

குருவுக்கு 5 வருட சேவை செய்தேன். உடல் உழைப்பாலும்,மாதாந்திர  நிதி உதவி செய்தும், ஆஞ்சேநேய மூர்த்திக்கு  என் செலவில் கோவில் கட்டியும் (4th Feb. 1991), சத்குருவின் சத் சிஷ்யன் ஆனேன்.1987ஆகஸ்ட் 19 தேதி முதல் 1992 ஜூன் வரை சேவை செய்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் என் மேல் பிரியம் கொண்டு, என்னை, அவர் போலவே, ஆஞ்சநேய உபாசகர் ஆக்கினார். பின்பு படிப்படியாக நான் குருவின் துணையுடன் ஶ்ரீ வித்யா உபாசகர் ஆனேன். இது போதாது என்று என்னை அம்பாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உபாசகர் ஆக்கினார். இறைவனை உணர்ந்தேன். (self -realization )

நெரூர் (Nerur): ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்

(Sri Sadasiva Brehmendral)
(Sri Sadasiva Brehmendra Saraswathi)
சமாதி கோவில்.

சென்னை சேலம் 333 கி.மீ (Chennai to Salem 333kms)
பெங்களுரு சேலம் 210 கி.மீ (Bangalore to Salem 210 kms)
சேலம் கரூர் 100 கி.மீ (Salem to Karur 100kms)
கரூர் நெரூர் 14 கி.மீ (Karur to  Nerur 14kms)


ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்திராள்

ஜீவ சமாதி நுழைவு வாயில்.


ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்


காவிரி ஆற்றுக்கு 1 /2 km தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜீவசமாதி. நாகலிங்க மரம், நாவல் மரம், பவழ மல்லி, மனோரஞ்சிதம், வேப்ப மரங்கள், சம்பக மரம், வில்வ மரம், மகிழ மரம், மாமரம் இன்னும் எத்தனையோ விருக்ஷங்கள்  தன்னுள் கொண்டது அந்த சமாதி பூமி. சுற்றிலும் வெளியே நெல் வயல்களும், கரும்பு காடுகளும், மஞ்சள் பயிரும், கோரை புற்களும் நிறைந்த மிக  அழகிய கிராமம் நெரூர். காவிரி ஆறு 1 கி.மீ அளவு விரிந்து ஓடிக்கொண்டிருக்கும். இத்தகைய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. குயில் குரலோசையும், பச்சைகிளியின் பாட்டும், மைனா, சிட்டுகுருவி, மரங்கொத்தி, மீன் கொத்தி, காக்கைகள் அங்குள்ள மரங்களில்  அமர்ந்து, தங்களுக்கு தோன்றியவாறு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பதை காண கண் கோடி வேண்டும். மிகவும் ரம்மியமான சூழல்நிலை. அப்போது பக்தர்கள்  தங்குவதற்கு இரண்டு அறைகள் மட்டுமே .

26
நவம்பர் 1989: பொன் எழுத்துக்களால் செதுக்க வேண்டிய நாள்.

அன்று காலை 7.30 மணிக்கு முதன் முறையாக (எனக்கு) என் குருநாதர் ஸ்ரீ குரு மகாதேவர் அவர்களுடன் ஸ்ரீ கைலாஷ் ஆஷ்ரம்என்று அழைக்கப்படும்  ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி கோவிலுக்குள் காலடி வைக்கிறேன்.

ஸ்ரீ குருவுடன் காவிரி ஆற்றுக்கு நீராட செல்கிறேன். சூரிய நமஸ்காரம், காவிரி தாய் நமஸ்காரம், முடித்து விட்டு பகவான் சமாதிக்கு வந்தோம். பகவான் சமாதிக்கு நேர் என்னை அமர்ந்து கொள்ள சொன்னார், என் குருநாதர். என் முன்னே அவர் அமர்ந்து கொண்டார். ஒரு பெரிய தாம்பாளத்தில், நான் கொண்டு வந்திருந்த பூ, பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய், வஸ்திரம், இவைகளை வைக்க சொன்னார். சொன்னபடி செய்தேன்.குரு தக்ஷிணை வைத்து, சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன்.


அன்று ஸ்ரீ குரு மகாதேவ் மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டார். இன்று முதல் நீ குரு ஸ்தானத்திற்கு தகுதி பெற்று விட்டாய் என்றார். உடன் என்னையே வெகு நேரம் உற்று பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு புரிந்து விட்டது. குருஜி எனக்கு நயன தீக்ஷைகொடுக்கிறார் என உணர்ந்தேன். உள்ளே ஊதா (violet rays) கதிர்கள் செல்வதை உணர்ந்தேன்.

பிரபஞ்ச நாயகன் சிவனின் அருவ நிலை (formless shape-Light rays) அல்லவா அது. புறத்திலும் என்னை சுற்றி ஊதா கதிர்கள் சூழ்ந்து கொண்டன. அதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. குருவின் மகிமை அன்றோ அது. சிவன் குரு வடிவில் வந்தார்.

10
நிமிடம் கடந்தது, இப்படியே. என்னை கட்டிப் பிடித்துக்கொண்டார். இனி உனக்கு, “ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள்என குரு பட்டம் தருகிறேன். பிற்காலத்தில், ” உன்னை எல்லோரும் சத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள்என அழைக்கட்டும், என்று உணர்ச்சி ததும்ப அருளினார்கள். என்னைக்காட்டிலும், நீ மிக உயர்ந்த நிலைக்கு வருவாய். அப்போது நான் சமாதி ஆகிவிடுவேன், என்றார். இதற்குதான் குருவை மிஞ்சிய சிஷ்யன்என்று பெயர் என விளக்கம் அளித்தார்கள்.

அன்று மாலை குரு ஆஷ்ரமத்திற்கு பறப்பட்டு விட்டோம் .

இதன் தொடர்ச்சி பகுதி-2 ல் ….


நன்றி . வணக்கம். குருஜி. 22 .05 .2010 .திருவண்ணாமலை.


%d bloggers like this: