Category Archives: 03. SHISHYAS’ EXPERIENCES WITH GURUJI

“நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்” – ஸ்ரீ வேலு

ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள் துணை

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் துணை

என் சேஷ பக்த சமாஜத்திற்கு, என் முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் வாழ்க்கையில் நடந்த, நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துக்கொள்ள நான் சேஷனிடம் கடமை படுகிறேன். எனக்கு கஷ்டங்கள் வரும்போது மட்டும், நம் குரு மந்திரத்தை சொல்வதில்லை. இன்பம் வரும்போதும் சேஷனுக்கு நன்றி கூறுவேன்.

சேஷ மந்திரத்தின்பலனாக எனக்கு என் மொட்டார் தொழிலில் சில அதிசய நிகழ்ச்சிகளை, நம் குரு, என்கண்முன் செய்து காண்பித்துள்ளார்.

முதலில் எனக்கு, வண்டி owner”, என்ற அந்தஸ்த்தை கொடுத்தார். வண்டி வாங்க பண உதவிகளை கேட்ட இடமெல்லாம் தரவைத்தார்! இதற்காக எங்கள் குருஜிக்கும் சேஷனுக்கும் நன்றி!

இரண்டாவது. என் மோட்டார் புழுது அடையும் அந்த நேரத்தில், ஆபத் பாந்தவனாகவந்து; அதன் முழு விவரம் – எதை எப்படி சரிசெய்ய வேண்டும், பாட்ஸ் எங்கு கிடைக்கும், என்பதையும் தெளிவு செய்தார்!

மூன்றாவது. ஒரு தடவை, ‘பவர் ஸ்டியரிங்க்‘, ‘பம்ப்‘, என்கிற பாட்ஸ் எல்லாம்  உடைந்து விட்ட. புதிய பாட்ஸ் மிகப் பெரியத் தொகை. நான் சேஷ மகான் மந்திரத்தைசொல்லிக் கொண்டிருந்த நேரம், மஞ்சள் நிரத்தில் உள்ள வண்ண்த்துப்பூச்சி உருவம் கொண்ட நம் குருநாதர், என்னை வட்டமிட்டார். நான் அப்பொழுது உள்ளுணர்ந்தேன். வண்டியில், நல்ல நிலையில் உள்ள பழைய ஸ்டியரிங்க் ஒன்று இருந்ததைக் கண்டேன். அதை என் வாகனத்தில் மாற்றிநேன். இன்று வரை அந்த ஸ்டியரிங்க், சேஷன் அருளால் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கிறது! எங்கள் சேஷனுக்கும், குருநாதருக்கும் மிக்க நன்றி!

நான்காவது. “நோனி”, என்ற ஆரோக்யம் தரும் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யலாமா என்று குருநாதரிடம் அனுமதி கேட்டேன். “செய்“, என்று அவர் சன்னதியில், பூஜை நேரத்தில் சொன்னார். அன்றே (31 டிசம்பர், 2010) தொடர்ந்தேன். அன்று முதல் அது நல்ல் முறையில் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் சேஷனுக்கும், குருநாதருக்கும் மிக்க நன்றி!

ஐந்தாவது. 12 மார்ச் 2011, இரவு 9.30 மணி அளவில், என் காரில் ஒரு பெரியவர், சிறிய காயங்களுடன் அடிபட்டார். அந்த கிராம் மக்கள் கூடி விட்டார். எனக்கோ முன்பெல்லாம் கை, கால், முகம், நடுங்கும். அன்றோ எந்த நடுக்கமும் இல்லாமல், அந்த பெரியவரை காரில் உட்க்காரவைத்து, “GH செல்லலாம்“, என்றேன். “வேண்டாம், பக்கத்தில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் அழைத்துப் போன்றார். என் காரில் உள்ள கஸ்டமரும், “ஏன்? ஏன்?” என்று பதற்றம் கொள்ளாமல், அமைதியாக இருந்தார். மிகப் பொருமையாக கைய்யாண்ட டாக்டரும், என் மீது தவரில்லை என்று, முதலுதவிக்குண்டான தொகையையும் வேண்டாம்என்றார். என்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து காபாற்றினார், நம் சேஷன்! GH-ல் போலிஸ் பிரச்சனை இல்லாமல், ஆபத் பாந்தவராக வந்த என் சேஷனுக்கு என் மனமார்ந்த நன்றி! என் அன்பு குருநாதருக்கு மனமார்ந்த நன்றி!

இப்படிக்கு,

வேலு, திருவண்ணாமலை

“சேஷ பக்த ஸமாஜம்

திருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2002. திருச்சி சதாசிவத்திற்கு,

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

செய்த  லீலைகள்.

2002 –ல் நியூ டெல்லி, Vikaspuri –ல் தங்கியிருந்தேன். ஒரு நாள் இரவு 9 மணிக்கு, சதாசிவம் திருச்சியில் இருந்து போன் செய்தார். “நான் heart check up செய்ய clinic சென்றேன். result: artery-ல்  ஒரு blockade இருப்பதாக டாக்டர்  சொல்கிறார். Chennai Apollo hospital –க்கு ref.letter தந்துள்ளார். “

சேஷனிடம் முறையிட்ட உடன்,எனக்கு சேஷனிடம் இருந்து  பதில் கிடைத்தது.
அப்படி ஒன்றும் இல்லை. டாக்டர் report, ஏதோ  காரணத்தால் தவறாகி விட்டது. Blockade இல்லை என சேஷ பெருமான் உறுதியுடன் சொன்னார்கள். இதை சதாசிவத்திடம் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டான். பேசாமல் விட்டு விடு. அவன் Apollo hospital சென்று வரட்டும். பிறகு டாக்டர் சொன்னார் என்று நான் சொன்னதையே திருப்பி  சொல்வான்“.

இரண்டு நாள் கழித்து, மீண்டும் சதாசிவத்திடம் இருந்து phone அழைப்பு. “நான் இன்று chennai  Apollo Hospital சென்று check செய்தேன் .டாக்டர் check செய்து விட்டு , – உனக்கு artery –ல் எந்த blockade –ம் இல்லை. எந்த டாக்டர் அப்படி சொன்னார்?என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

நான் அவரிடம், “சேஷாத்ரி பெருமான், இரண்டு நாட்களுக்கு முன், நீங்கள் phone-ல் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, Apollo டாக்டர் உங்களிடம் இன்று  சொன்னதை சொல்லிவிட்டார்கள்“, என்றேன். மகான் சொன்னதை அப்படியே அவரிடம் சொன்னேன்.

நன்றி.குருஜி.

திருவண்ணாமலை.

22 .06 .2010.

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே.

Sesha Leelas – Girnar Valley Wine Corporation

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae


2006. Girnar Valley Wine Corporation, 60 kms from Nashik. (near Gujarat border) Sesha’s Leelas.

Anil Mudhbake என்பவர் மராத்திக்காரர். அவர் nivruthinath (Nav-nath) பரம்பரையில் வந்த ஒரு குருவின் சிஷ்யர். என் மூலமாக ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மந்த்ரம் உபதேசம் பெற்றுக்கொண்டவர். அவர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி யில் development officer . 5 முறை National Award வாங்கியவர்.

அவர் நண்பர் seedless green & white grapes மூலம் wine தயாரிக்கும் factory வைத்துள்ளார். அது சரியாக இயங்கவில்லை. அவரைப்பார்க்க சென்றோம்.

அவர் Ex M.L.A. Factory முழுவதும் சுற்றிப் பார்த்தோம். மிகப்பெரிய factory.
(10 lakhs litres capacity-per season-jan to april -)
நிதி பற்றாக்குறையால் இயங்கவில்லை. அந்த கவலையால் ex M.L.A.-க்கு  இருதயக் கோளாறு.

இரண்டு வால்வுகளில் அடைப்பு (blockade ). “ஆயுர் வேத மருந்து சாப்பிடுகிறேன்“, என்றார்.

சிறிது நேரம் கண் மூடி சேஷனை நினைத்தேன்.

சேஷனின் தெய்வீக அருளுரை: ” ex M .L .A  check up செய்தபோது இரண்டு அடைப்புகள். (blockade). ஆனால் தற்போது மூன்று blockades உள்ளது. ஆயுர் வேத மருந்து உதவாது. அலோபதியில்  உடனே blockades remove செய்ய  வேண்டும் . காலம் தாழ்த்த வேண்டாம் என்று சொல் . மகனிடம் (son) factory பொறுப்பை கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்கச்சொல்“.

நம் அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் வாக்கினை ex M .L .A .க்கு சொல்லிவிட்டேன். அவருக்கு அது சரியாக படவில்லை. ஆனாலும் என்னிடம் சேஷ மந்த்ரம் உபதேசம் பெற்றுக்கொண்டார். தினமும் 500 தடவை சொல்ல சொன்னேன். சரி என்றார்.

சிறிது நேரத்தில் புறப்பட்டோம். இரண்டு நாட்கள் கழிந்து Anil Mudhbake, எனக்கு போன் செய்தார்.” ex M .L .A தினமும் 500 தடவை சேஷ மந்த்ரம் சொல்வதாகவும், அது  அவர் மனதிற்கு அமைதி தருவதாக இருப்பதாகவும், உள்ளதாம்என்று சொன்னார்.

இரண்டு வாரம் கழிந்து மற்றொரு போன் செய்தி, Anil Mudhbakeவிடம் இருந்து வந்தது.

Ex M .L .A . க்கு ஆபரேஷன் நடத்தப்பட்டது. சேஷன் சொன்னது போல மூன்று blockades remove செய்தார்களாம். Ex M.L.A. நன்றி தெரிவிக்க சொன்னார்.

அவதார புருஷர், சித்த புருஷர், சேஷ பிரம்மம், லீலைகளை என்னவென்று வருணிப்பது? யாரால் வருணிக்க முடியும்?

நம் விருப்பத்தை அவர் செயல்படுத்த வேண்டும் என்று ஆசீர்வாதம் கேட்பதை விட, சேஷன் என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம். மகான்களிடம் வாக்கு கேட்பவர்கள், மகான்கள் சொல்வது போல நடந்து கொண்டால், இனியவை நடக்கும், Ex M.L.A.-க்கு சொன்னது போல. மகான்கள் த்ரி கால ஞானிகள். அவர்களுக்கு நம் எதிர் காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று  அவர்களுக்கு தெரியும்.

நன்றி. குருஜி.

திருவண்ணாமலை.

21 .06 .2010


Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

சேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சேஷ லீலைகள்


2000 –
ல் நடந்தது. சென்னையில் திருமதி வரலக்ஷ்மி அம்மாள் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பக்தை. அப்போது அவர்களின் வயது 60. மகானிடம் 1987 முதல் அளவற்ற ஈடுபாடு. எனக்கு 1996 முதல் அறிமுகம். அடிக்கடி மகான் வாக்கு கேட்பார்கள் .

அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். ஒரு நாள் மகான்,தன் அருளுரையை
அவர்கள் வீட்டில் என் மூலம் தந்து கொண்டிருந்தார்கள்.


மகான் அருளுரை : அம்மாவைப்பார்த்து, “உன் மகனை ஒரு மாருதி கார் வாங்கச்சொல். ஆபீஸ் மற்றும் வெளியே செல்ல வசதியாக இருக்கும்.”

மகான் வாக்குப்படி மாருதி கார் 10 நாட்களில் வாங்கப்பட்டது. திருமதி. வரலக்ஷ்மி அம்மாள் மகனுக்கு, car driving கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அம்மாவுக்கு தைரியம் அதிகம். “நான் முதலில் driving கற்றுக்கொள்கிறேன்,” என்று என்னிடம் கூறினார்கள். அடுத்த நாள் காலையிலிருந்து training ஆரம்பம். 10 நாட்களில்  நன்கு கற்றுக்கு கொண்டார்கள். RTO officer  Driving செக் செய்து Driving licence
10
வருட காலத்திற்கு issue செய்து விட்டார்.

ஆனால் ஒன்று. சென்னை Adaiyar area வில் 2nd  gear –ல்  மட்டும் அம்மா
ஓட்டுவார்கள். அவ்வளவு பயம். கார் டிரைவர் ஏற்பாடாகியது. அனால் மகான் வாக்கு பலிக்க வேண்டும் என்பதற்காக  விடா முயற்சியுடன் Car driving license (60 வயதில்முதன் முறையாக) வாங்கியது, மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். மகான் வாக்கினை அப்படியே ஏற்று நடப்போம். அதில் திருத்தங்கள் செய்து வாக்கை வீணாக்க வேண்டாம். அதனால் என் தபஸ் மகிமை வீணாகிறது.

Composer :அவதார புருஷர், சித்த புருஷர்,ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.

Title : “சேஷா  கருணா சாகரா”


சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சிவனின் அவதாரம் நீயே !

பக்தர்களுக்கு சாரதியாய் வருபவரே
பார்த்தசாரதியின் மறு  உருவம் நீயே !
உன்னுள் சிவதாண்டவமும்உண்டு;
காமாக்ஷியின் கருணையும்  உண்டு !
சேஷா கருணா சாகரனே ……
மங்களம் தரும் மானிட தெய்வம்  நீயே
மலரின் மணத்தினை மாந்தர் மனதில் நிறுத்தி
மயங்க வைக்கும் மாயக்கூத்தனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .
சௌபாக்கியம் தரும் சௌந்தர வல்லியும் நீயே
அன்பினை அள்ளித்தரும் அபிராமியும் நீயே !
சேஷா கருணா சாகரனே ..
வரமளித்து  வற்றாத செல்வம் தரும் வாராஹியும் நீயே
தாயாய் வந்து தனி அன்பினைத் தரும்
தாயுமானவரும் நீயே !
வைத்தியராய் வந்து ஆயுளை நீடித்த
வைத்தீஸ்வரனும் நீயே !
சேஷா கருணா சாகரனே
சிறந்த செல்வங்களைத்தரும்
சியாமளா  கிருஷ்ணனும் நீயே !
மண் வளம் மாற்றிய
மஹா  திரிபுர சுந்தரியும் நீயே !
சேஷா கருணா சாகரனே
வாழைத்தோப்பினை வாழ வைத்த
வயலூரானும் நீயே !
குணம் குன்றாமல் குலம் காத்த
கோமளவல்லித் தாயும் நீயே !
சேஷ கருணா சாகரனே
குல தெய்வம் இதுஎன காட்டிய
குண சீலனும்  நீயே !
வேல் வாங்கி தன் பக்தனைக் காத்த
வேலவனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .
குருவாய் வந்து குண்டலினியைஎழுப்பிய
குருவாயுரப்பனும் நீயே !
சேஷா கருணா சாகரனே .


Nashik – Naidu Sesha Leelaikal

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகலள் திருவடிக்கே

Sesha Paamaalai Header

பக்தர்களின் இதயமே,

பகவான் சேஷப்ரம்மத்தின் திருக்கோவில்!”

பகவான் சேஷப்ரம்மம்


2004. நாசிக் (Nashik – 192kms from Mumbai )12 வருடங்களுக்கு ஒரு முறை கும்ப மேளா நடக்கும் இடம்.) இந்தியாவில் நடக்கும் மூன்று கும்பமேள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

அங்கிருந்து 20 kms தொலைவில்(Trambakeshwar) த்ரம்பகேஷ்வர் (திரியம்பகேஷ்வர்). 12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்று .கோவிலின் பின்புறம் உள்ள  பிரம்ம கிரி மலையில் இருந்து கோதாவரி ஆறு உற்பத்தியாகி ஆந்திரா,ராஜமுந்திரியில் கடலில் கலக்கிறது. ராஜமுந்திரியில் என் குரு, ஸ்ரீ குரு மகாதேவுடன் 1990 ரிலும் , பிரம்மகிரியில் 2004 –ல் தனியாகவும் சென்று பார்த்தேன்.


நாசிக் நாயுடு வீட்டில், பத்து வருடகாலமாக உலாவிய ஆவியின் (bad spirit)
தொல்லையை நீக்கினார் நம் அவதார சிவ சேஷாத்ரி ஸ்வாமிகள்.

நாயுடு,  Nashik India security press- ல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியை கெட்ட ஆவி பிடித்திருந்தது. இரவில் கெட்ட ஸ்வப்னங்கள் (Dreams).அடிக்கடி நல்ல பாம்பு கொத்துவது போல. வீட்டில் நிம்மதி இல்லை.

பகல் நேரத்தில் சமையல் அறை (Kitchen) ஜன்னல் வழியாக நல்ல பாம்பு அடிக்கடி வந்து பயமுறுத்துமாம்.இது உண்மை,கனவல்ல. மரண பயம் வேறு. ஒரு மகள். ஒரு மகன்.

அவர் வீட்டில் சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹா  மந்த்ரம்(ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே) ஓதிக்கொண்டிருந்தோம்.

சேஷ சிவனின் (ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்) அருளுரை: முன்னோர்கள் சாபத்தினால் கெட்ட ஆவி பிடித்துள்ளது. அநு தினமும் 1000 தடவை சேஷ மந்த்ரம் சொல். உன்னை சரியாக்கிவிடுகிறேன். உன் வீடு சுபிக்ஷம் அடைந்தது விடும். உன் குழந்தைகளும்,உன் கணவரும் மந்த்ரம் சொல்லட்டும். அனைவருக்கும் நல்லது நடக்கும். விபூதியை வீடு, தோட்டம் மற்றும் எல்லா இடங்களிலும் தூவி விடு. எல்லோரும் தினமும் படுக்க செல்லுமுன் விபூதி நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்“.
வீட்டில் அனைவரும் சேஷனின் அருளுரையை பயபக்தியுடன் ஏற்றுக்கொண்டனர். அநு தினமும் நானும் என் பிராத்தனையை குரு என்ற முறையில் சொல்லிக்கொண்டிருந்தேன். (Twelve Commandments). 10 நாட்கள் சென்றன.

ஒரு நாள் நாசிக்கில் நான் தங்கியிருந்த இடத்திற்கு நாயுடு வந்தார். எனக்கு தன் பணிவான வணக்கம் தெரிவித்தார்.  10 வருடங்கள் தீராத பிரச்சனையை தீர்த்து விட்டீர்கள். நன்றி. மனைவிக்கு கெட்ட ஸ்வப்னங்கள் முற்றிலுமாக நின்று விட்டன. வீட்டில் சமையல் அறைக்கு பகல் நேரத்தில் நல்ல பாம்பு வருவதும் நின்று விட்டது. அனைவரும், தாங்கள் சொல்லியபடி மந்த்ரம் 1000 தடவை ஒவ்வொருவரும் சொன்னோம். அதில் உறுதியாக இருந்தோம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு நன்றி.

அந்த  குடும்பத்தில் அடுத்த ஒருவருடத்தில் மற்றொரு சம்பவமும் நடந்தது.
நாயுடு மகன் diploma in pharmacy படித்திருந்தான். மந்த்ரம் தினமும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு விடா முயற்ச்சியும் அதிகம். முயற்சி சேஷன் அருளுடன் திரு வினை ஆயிற்று. துபாயில் வேலை கிடைத்தது. ஒரு கெட்ட ஆவியினால் கஷ்டப்பட்ட குடும்பம் சேஷ மந்த்ரத்தால் நற் பலன் அடைந்தது.

குருவின் உபதேசத்தை (பேரறிவை(Universal mind ) சிற்றறிவால்(Knowledge -gross mind )) ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே பின்பற்றினார்கள். குரு உபதேசத்தில் தங்களுக்கு சாதகமானதை மட்டும் எடுத்து கொண்டு, மற்றதை விட்டு விடும் சிலரைப்போல் அல்லாமல், முழுவதுமாக ஏற்றுக்கொண்டதால், எனக்கு சேஷனிடம், சிஷ்யர்களுக்காக, பிராத்தனை செய்வது மிகவும் எளிதாயிற்று. மேலும் அந்த குடும்பத்தின் பூர்வ ஜன்ம நற்பலன் அதிகமாக இருந்ததால், சீக்கிரமாக நல்லது நடந்து விட்டது. எல்லாம் சேஷனின் செயல். நம் கையில் எதுவும் இல்லை.


திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார்.


கடந்த 12.06.2010. அன்று பகல் 12.15 மணிக்கு திருச்சி M .G .சதாசிவம் எனக்கு போன் செய்தார். தன்னுடைய email Id (mgsadasivam1948@gmail.com) மூலம்  மெயில் அனுப்பினால்  யாருக்குமே போய்ச்சேரவில்லை என மன வருத்தத்துடன் என்னிடம் போனில்  பேசினார். கடந்த 10 நாட்களாக இந்த பிரச்சனை.

சதாசிவம் சொன்னது:
“BSNL internet connection
வாங்கியிருக்கிறேன்.  BSNL officers , technicians எல்லோரும் வந்து என் System மற்றும் Modem இவைகளை check செய்தார்கள்.

அவர்களின் connection – ல் fault இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

உங்களின் system சரி பார்க்கவும் என்று கூறிவிட்டு போய்விட்டார்கள்.

நாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.  T.V.ல் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் பொது மக்கள் சார்பில் (on behalf of Public)  govt. செய்யும் தவறுகளை High court நீதிபதி   கவனத்துக்கு கொண்டுவர, வக்கீல்கள் அல்லது பொது ஜனம் யாராவது மனு (public litigation) செய்வார்கள். மனுவின் அவசரத்தை முன்னிட்டு, அந்த மனுவையே high court நீதிபதி, writ petition –ஆக (தனி writ petition தேவையில்லை) ஏற்றுக்கொண்டு, govt .க்கு show cause notice அனுப்புவார்கள்.

அப்படி ஒரு அனுபவம் 12 .06 .2010 . அன்று பகல் 12 .15 மணி  சுமாருக்கு நடந்தது. சதாசிவம் வருத்தப்பட்டு சொன்னதையே அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம், மனுவாக கொடுத்துவிட்டேன். அவரிடம் போனில் ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறு பக்கம் மகானிடம் சூக்ஷ்மத்தில் மனு கொடுத்துவிட்டேன். இது சதாசிவத்துக்கு தெரியாது.

அவதார்  சேஷ சிவன், என் மனுவை அப்படியே writ petition ஆக எடுத்துக்கொண்டார். உடனே உத்தரவும் (தீர்ப்பும்) சொல்லிவிட்டார். இதை அவரிடம் நான் சொல்லவில்லை. அனால் மகான் தீர்ப்பை மட்டும் கூறினேன்.” நீங்கள் புது email Id open செய்யுங்கள்” ,என்றேன். அவர் அதற்கு,  ” நியூ டெல்லியில்  உள்ள என் மகன் ஜம்புநாதனிடம் புது email Id open பண்ண
சொல்லியிருக்கிறேன் “, என்று சொன்னார். நான் மீண்டும், ” srirangamsadasivamsesha@ …..என்று
email Id
(
இது நீதிபதி மகான் என் மனுவை (guru ‘s prayer) ஏற்று, உடன் மின்னல் வேகத்தில் தீர்ப்பில் இந்த email ID யை சொன்னார்) வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். 10 நிமிடத்தில் கிடைத்துவிடும் என்றேன்.

அவர் சிரித்தார். வேறொன்றும் சொல்லவில்லை அவர். பிறகு phone switch off செய்து விட்டேன். சதாசிவம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் மஹான் அனுக்ரகத்தால் சொந்த flat –ல் குடியிருக்கிறார். சதாசிவம் நான் சொன்னதை செய்துவிட்டார் என்பது எனக்கு சூக்ஷ்மத்தில் தெரிந்து விட்டது. மகான் சொன்ன email Id அவருக்கு பலன் கொடுத்து விட்டது. நான் சிரித்துக்கொண்டேன். மகானுக்கு நன்றி சொல்லி விட்டேன் .

ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை, இது சம்பந்தமாக, இன்றுவரை. அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் புது email Id அவர் சிஸ்டம் மூலம் போய் சேர்ந்து விட்டாதாக மகான் என்னிடம் சொல்லி விட்டார். அவர் குறை எளிதில் தீர்க்கப்பட்டது, மகான் கருணையால்.Quick disposal by Mahan. சில நேரங்களில் கல்யாண விருந்தில் முக்கிய விருந்தாளியை நம் மறந்து விடுவோம்.


இன்று (15th JUNE 2010 ) காலை 7.30 க்கு  எனக்கு ஒரு email வந்தது . அனுப்பியவர் என் சிஷ்யர் மும்பை ஸ்ரீ M . ராஜகோபால். (வயது 52 ) . அதாவது, ” ஸ்வாமிஜி , எனக்கு(மும்பை ராஜகோபால் ), ஸ்ரீ M.G சதாசிவம் திருச்சி, ஒரு email அனுப்பியுள்ளார். அதில் அவரின் புது email iD – யை தெரிவித்துள்ளார்.
அது : srirangamsadasivamsesha@yahoo.in

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தன் தீர்ப்பை, சதாசிவம் அமல் படுத்தியதை, ராஜகோபால் மூலம் எனக்கு தெரிவித்து விட்டார். நீதிபதி அவதார் ஸ்ரீ சேஷ பிரம்மத்திற்கு, பக்தன் சார்பில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

SESHA= INCARNATION OF LORD OF UNIVERSE = SHIVA

சாதாரண விஷயத்திற்கு கூட  மகான் எப்படி உதவுகிறார் ?ஸ்ரீ சதாசிவம் குடும்பத்தினருக்கு கடந்த 1994 நவம்பர் முதல் அவதார் ஸ்ரீ சேஷாத்ரியின் அருளுரையை  வழங்கி வருகிறேன். அவர் குடும்பம் சீரும் சிறப்புமாக சிறந்து வாழ அவதார் சேஷாத்ரி பக்த சமாஜத்தின்சார்பாக எல்லோரும் வாழ்த்துவோம். M .G .Sadasivam new email Id :srirangamsadasivamsesha @yahoo .in
சிவசேஷன், தன் பெயரை, பக்தனுடன் email Id யிலும்  இணைத்துக்கொண்டுள்ளார்.

இதை சேஷனின் லீலை என்று தானே சொல்லவேண்டும்.

சேஷனும் பக்தர்களும்” verse: 84

(27th. October, 2009 – 3:02 p.m.)

http ://seshapaamaalaigal .wordpress .com

Composer : அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

பவழமல்லிப் பூக்களை,
பரப்ரம்மனாம்  சேஷனின் பொற்பாதங்களில்,
பணிவுடன் தூவி, உடன் சேஷ  பாமாலையும் பாடினால், பல அற்புதங்கள் நடந்திடுமே
சேஷ பக்தர்களின் வாழ்க்கையிலே!

To  know how our system functions, please click:
THE TWELVE COMMANDMENTS

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

Thank You
Yours Guruji
Thiruvannamalai.

15th June 2010.

சேஷனின் லீலைகள்

2004 .March . சேஷனின் லீலைகள்


ஹரிஷ், மும்பை. தகப்பனார் கார் (CAR) வாங்காததால் படிப்பில் கவனம் குறைந்தது. மும்பையில் ஹரிஷ் 10th Std படித்துக்கொண்டிருந்தார். Feb 2004 ல் Revision Test ல் average 48%. March 20 ல் Public Exam. பெற்றோர்கள் மிகவும் கவைப்பட்டனர்.

அழைத்ததின் பேரில் நான்  அவர்கள் வீட்டிற்கு  சென்றேன். சிறிது நேரத்தில் மகானின் பதில் வந்தது.

ஹரிஷ்ன் நண்பர்கள் வீட்டில் பெரிய சைஸ் கார்கள் உபயோகத்தில் இருக்கிறது. ஹரிஷ் அப்பா மிக பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் கார் வாங்கவில்லை. இது ஹரிஷ்க்கு மனவருத்தத்தை உண்டாக்கி படிப்பில் கவனம் சிதறியது.” – மகான் சேஷாத்ரி .

மீண்டும் மகான் அருளுரை: உனக்காக இல்லாவிட்டாலும், உன் மகனுக்கும்,உன் குடும்பத்தினருக்கும் உபயோகப்படுத்த ஒரு பெரி கார் நாளையே Book செய்துவிடு. உன் மகன் March 20 ல் நடக்கும் Public Exam ல் நிறைய மார்க்குகள் வாங்கிவிடுவான். அதை நான் கவனித்து கொள்கிறேன்“.

தந்தை பிடிவாதமாக இருந்தார்.

உடனே மகான் அருளுரை: கார் கலர் “PURPLE” தானே?” ஹரிஷ் தங்கை, மற்றும் அவன் அம்மா அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


ஹரிஷ், அவன் தங்கை, அவன் அம்மா மூவரும் சேர்ந்து, ஆமாம் ஸ்வாமிஜி, ” நாங்கள் ஏற்கனவே காருக்கு select செய்த கலர் PURPLE ” என்றார்கள்.

ஹரிஷ் அப்பாவுக்கு ஆச்சர்யம். எல்லோரும் 2003 –ல்  அறிமுகம். சேஷ மந்திரம் பிரியத்துடன் சொல்வார்கள். குருஜி வாக்கினை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் மன இயல்பு. அடுத்த நாள் கார் book செய்யப்பட்டது. ஹரிஷ்க்கு மஹா சந்தோஷம். நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிட்டான்.

10th exam result june-ல் வந்தது. ஹரிஷ் Average Marks: 78 % .ஹரிஷ் வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர். ஒரு மாத இடைவேளையில் 48 % to 78 % percentage வாங்கியது ,மகான் செய்த மிகப்பெரிய MIRACLE என்றார்கள்.
மகான், ” உங்கள் உருவத்தில் உலா வருவது கண் கூடாக எங்களுக்குத் தெரிகிறதுஎன்றார்கள்.

இரண்டு வருஷம் கழிந்தது .12th std –ல்  அதே 78 % . B.E Marine Engg- ல் ஹரிஷ் சேர்ந்து விட்டார்.
எல்லா புகழும் சேஷனுக்கே. நாம் சிவ சேஷன் நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. நாம் ஒன்றும் செய்யமுடியாது. முயற்சி மட்டும் நாம் செய்து கொண்டே இருந்தால், திருவருள் தானே வரும். சேஷ மஹா மந்த்ரம் நாள் தோறும் பல நேரங்களில் சொல்வோம்.

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே.(மூல மந்த்ரம்) Seshan – Incarnation of Shiva.

சேஷனும் பக்தர்களும்” verse: 44

(19th. September, 2009 – 7:04 a.m.)


பக்தர்களின் மனதில் வாழும் சேஷ ப்ரம்மமே!
நித்தமும் ஆசீர்வதிக்க வேண்டும்  உன் பக்தர்களை;
பக்தர்களின் மனதில் சேஷப்ரம்மம்  நிரந்தரமாக குடியிருக்க வேண்டும்;

தங்கமான பக்தர்களின் மனதில்,
தன்னம்பிக்கையை துவக்கி வைக்க,
சேஷப்ரம்மத்தை வேண்டுகிறோம்!

நன்றி.வணக்கம்.,

குருஜி. திருவண்ணாமலை.

09 .06 .2010 .


ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2008. ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு
63
வயதில் வேலை கிடைத்த அற்புதம் – சேஷ லீலைகள்.


திருமதி. சியாமளா வைத்தியநாதன், திருச்சி அருகில் உள்ள அல்லூரில் வசிக்கிறார். மகானின் பக்தை. சேஷ மந்த்ரம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஒருமுறை மகானிடம் ஒரு விண்ணப்பம் செய்தார். அதாவது வேலை வேண்டும். கஷ்டமான வீட்டு சூழ்நிலை..


சேஷனின் வாக்கு: “ஹிந்தி டீச்சர் வேலை கிடைக்கும். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில்  முயற்சி செய்“.

ஒருவாரம் சென்றது. டீச்சர் முயற்சி செய்தார்.திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று  வேலை கேட்டார். 5 மாணவர்கள் ஹிந்தி கற்க ஆசைப்படுகிறார்கள். தற்போது ரூ 500 மாத சம்பளம் தருகிறோம். பிறகு மாணவர்கள் எண்ணிக்கை கூடும்போது சம்பளம் நிறைய தருகிறோம் என்று நிர்வாகத்தினர் சொன்னார்களாம்.

ஹிந்தி டீச்சர் என்னிடம் கேட்டார்கள். சேஷனின் லீலை எல்லாம் முதலில் சிறியதாக ஆரம்பித்து பின் படிப்படியாக பக்தரின் முன்வினைக்கு ஏற்றபடியும்,
சேஷனின் மூல மந்த்ரம் அநேக தடவை திருப்பி திருப்பி சொல்வதன் மூலமும், (மொட்டு மலராக சிறிது சிறிதாக விரிவது போல) சேஷன் நம் வினை பயனை மாற்றி பெரிது படுத்துவார். ஆகவே டீச்சர் பதவியை ஏற்று கொள்ளச்சொன்னேன்.

அவரும் முழு திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். சில மாதங்கள் கழிந்தன.
மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆக கூடியது. சம்பளம் ரூ 1000/ என உயர்ந்தது. அடுத்த சில மாதங்களில் மேலும் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இறுதியில் சம்பளம் ரூ. 2500/ ஆக உயர்ந்தது. காரண காரியம் ஆராய்ச்சி செய்யாமல் சேஷனின் வாக்கினை அப்படியே ஏற்று செயல் படுத்துவோர்க்கு எல்லாம் நன்மையாக முடியும்.

சேஷனின் வாக்கினில் தனக்கு சாதகமானதை ஏற்றுக்கொள்வதும், மற்றதை நிராகரிப்பதும் தவறாகும். நம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டால், தெய்வம் தேவையில்லையே. நமக்கு தெரியவில்லை, முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை,
இப்படி நேரும்போது தானே மகான்களை அணுகுகிறோம்? பிறகு என்ன?


அவர் வாக்கினை ஏற்று கொள்ளவேண்டியது தானே. என்ன தயக்கம்? ஒன்று அகந்தை (EGO). மற்றொன்று தான் எடுத்த  முடிவை மகானே நேரில் வந்து சொன்னாலும் ஏற்காத பிடிவாதம்.

ஒரு தாய்  தன் குழந்தைக்கு என்ன உணவு கொடுத்தால் ஜீரணமாகும் என்று நினைக்கிறாரோ,அதேபோல த்ரி கால ஞானியாம் சேஷனுக்கும் தன் பக்தனுக்கு எதைக்கொடுத்தால் நிலைத்து நிற்கும் என அறிந்து வாக்கு சொல்கிறார். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். தலை வலி பக்தனுக்கு தானே தவிர சேஷனுக்கு அல்லவே .

நன்றி.வணக்கம். குருஜி.

திருவண்ணாமலை. 05 .06 .2010 .

வந்தீப் ஷெட்டி வாழ்க்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2003 /2006: மும்பை வந்தீப் ஷெட்டி(கன்னடக்காரர்– Vandip Shetty) வாழ்க்கையை மாற்றியமைத்த

அவதார சேஷாத்ரி ஸ்வாமிகள் (incarnation of Shiva)


ஸ்ரீ. வந்தீப் ஷெட்டி என்னை சந்திக்கும் போது (2003 ) 21 வயது இளைஞர்.B.Com. கெட்ட நண்பர்கள் சகவாசம். வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார். அவர் தகப்பனாருக்கு Ghatkopar (W) ரயில்வே ஸ்டேஷன் வெளியே Paan beda shop வியாபாரம். பெற்றோர் இருவரும் மன வருத்தத்துடன் முறையிட்டார்கள்.

அப்போது ஜூன் 2003. மும்பையில் மழை சீசன் தொடங்கிவிட்டது.

அவர்களுக்கு குல குரு உண்டு. வந்தீப் பெற்றோர்களுடன் வந்து ஆசிர்வாதம் கேட்டார். அவருக்கும் பெற்றோர்களுக்கும் spariksha தீக்ஷை, ஆக்ஞா சக்கரம் (the 6th Chakra in Kundalini Yoga-to activate the soul- guru’s Brahma Sakthi initiated. it is an imaginary chakra situated in between two eye brows) வாயிலாக கொடுக்கப்பட்டது. பிறகு ‘சேஷ மந்த்ரம்’, ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கேமந்திர உபதேசம் கொடுக்கப்பட்டது. அனு தினமும் 1000 முறை ஒது மாறு  அறிவுரை செய்யப்பட்டது. எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டனர்.

2003 மழைக்காலம் முடித்தவுடன், வேலை தேட சொல்லி வாக்கு சொல்லப்பட்டது.

இந்த Brahma சக்தி குருவின் தபஸ் சக்தியிலிருந்து, சிஷ்யனின் தேவைக்கு ஏற்றவாறு வழங்கப்படும். அது ஆத்மாவை தூண்டி விடும். பிறகு,சேஷ மந்திரம் ஓதும் போது, ஆத்மா பலம் பெறும். ஆத்மா தன் சார்பாக, மனதுடன் மன சாட்சியாக பேசும். “நீ செய்வது சரியல்ல. உன்னை திருத்திக்கொள் என்று பேசும்வந்தீப் சேஷ மந்த்ரம் ஓத ஓத அவர் ஆத்மாவும் அவர் மனதுடன் பேசி அவரை திருத்தியது. நண்பர்களின் சகவாசத்தை கைவிட்டார். 2003 october –ல் வேலைக்கு முயற்சி செய்தார்.

J.N.P.T. (JAWAHARLAL NEHRU PORT TRUST-MUMBAI) –ல் CONTAINER TERMINAL –ல் C & F (CLEARING AND FORWARDING) AGENT-ஆபீஸ்ல் வேலை. மாத  சம்பளம் Rs. 8000 . 10 மணி நேர வேலை. படிப்படியாக அவர் திறமையும், சேஷ மந்திர ஜெபமும், அவரை  மேல் நிலைக்கு உயர்த்தியது. அதாவது 2005 ஜனவரியில் அவர் மாத சம்பளம் Rs. 18000/ ஆக  உயர்ந்தது. வேலை நேரமும் கூடியது. 16 மணி நேர வேலை. உழைத்தார். கடுமையான உழைப்பு.

ஏற்கனவே குடியிருந்த 300 sq .ft flat ஐ விற்று விட்டு வேறு 650 sq.ft flat வாங்கலாமா என வாக்கு கேட்டார். சேஷ நாதனின் சம்மதம் கிடைத்தது. ஒரே மாதத்தில் 2005 பெப்ருவரியில் புது flat கிடைத்தது. புது flat கிடைத்ததும், வந்தீப் பெற்றோர்களுக்கு ஒரு வாக்கு சொல்லப்பட்டது. “வந்தீப் திருமணத்திற்கு பெண் பார்க்க உத்தரவு வந்தது, சேஷன் மூலமாக. 2006 ஜனவரி 22 ஆம்  தேதி திருமணம் நடந்தது. மணப்பெண் ஸ்ரீ வித்யா Vikroli Accenture –ல் (Rs .20000 / ல்) வேலையில் இருந்தார்.

நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.   05.06.2010.

காணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

காணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது.
2006 .
நாசிக். (Nashik -192kms from Mumbai )

கராத் தாதா(Kharat Dhadha), Bharath Petroleum Corporation limited –ன் Retail out let (petrol & diesel) owner. நாசிக்கிலிருந்து 26kms தொலைவில் அந்த பெட்ரோல் ஸ்டேஷன் இருந்தது. அது அவதார் சேஷனின் அனுக்ரஹத்தால் 2005 ஜனவரியில்

chandori என்ற  கிராமத்தில் Ahmednagar -Shirdi ரோட்டில் உருவானது. ஷிர்டி
அங்கிருந்து 50kms.

தாதாவுக்கு என் மேல் அலாதியான பிரியம். சேஷனையும் என்னையும் ஒன்றாக பாவனை செய்துகொள்ளும் மன பக்குவம். ஆகவே என்னைப்பார்க்கும் போதெல்லாம்,”ஸ்வாமிஜிஎன்று அழைப்பார். மகான் மந்திரம் நன்றாக
உச்சரிப்பார். மராத்திக்காரர். படிப்பு 10 th class.

ஒருநாள் அவர் நண்பர் மூலம் ஒரு தகவல் எனக்கு அனுப்பினார். அந்த அற்புத லீலைகளை (அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்) இங்கு விவரமாக சொல்கிறேன்.

கராத் தாதா வாரம் இரண்டு முறை, பெட்ரோல் & டீஸல் Truck load எடுக்க

அங்கிருந்து 75 kms தொலைவில், Manmad என்ற ஊரில் உள்ள BPCL zonal office –க்கு செல்ல வேண்டும். Rs.3,75,000 DD கொடுத்தால், ஒரு truck load Diesel எடுத்து

செல்ல அனுமதி கொடுப்பார்கள். ஒரு நாள் diesel load எடுகக BPCL zonal office
சென்றார். sales bill ready . out pass ready . தன் ஜிப்பா பாக்கெட்ல் கைவிட்டு DD யை எடுகக நினைக்கிறார். னால் DD அங்கு இல்லை. காணாமல் போய்விட்டது.

கராத்துக்கு கவலை. “சேஷ மந்த்ரம்பலமுறை ஜெபித்து விட்டு என்னை நினைத்தாராம். Sales offcer ,”என்ன தேடுகிறாய்“? என்று கேட்டாராம். கராத், ” DD காணவில்லை. காலை 10.30க்கு, Nashik SBI –ல் Rs 3,75,000 க்கு DD எடுத்து ஜிப்பா மேல் பாக்கெட் ல் வைத்தேன். எப்படி காணாமல் போயிற்று என தெரியவில்லை என்று officer –ரிடம் சொன்னாராம். DD இல்லையென்றால், Diesel எடுத்து செல்ல முடியாது. ஆனால் Invoice Bill & out pass issue

பண்ணிவிட்டதால், Load எடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை.  Cancel செய்ய முடியாதாம். அங்கே சேஷன் தன் லீலையை officer மூலம் காட்டினார்.

Sales officer கராத்தை பார்த்து சொன்னாராம். “கவலைப் படாதே. நீ சொல்வது உண்மை. என்னுடைய Risk-ல், நீ load எடுத்துச்செல்ல அனுமதி தருகிறேன். நாளை DD கொடுத்து விடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, கராத் மொபைல் போன் மணியடிக்கிறது.

Hello” என்கிறார், கராத்.  Sir,” நான் nashik – manmad Road-ல் மோட்டார் பைக்ல்
வந்து கொண்டிருந்தேன். மெதுவாக வந்து கொண்டிருந்தேன். ரோடின் இடது பக்கம் கலர் கார்டு போல் ஒரு காகிதம் விழுந்து கிடந்தது. வண்டியை நிறுத்தி, அது என்ன என்று பார்த்தேன். SBI DD Rs. 3,75,000, favouring BPCL என்று இருந்தது. தற்செயலாக பின்புறம் திருப்பி பார்த்தேன். அதில் ஒரு மொபைல் போன் நம்பர் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பருக்கு  போன் செய்தேன். DDkku சொந்தக்காரர் தானே என்னோடு இப்ப பேசுவதுஎன்று கேட்கிறார். ஆம்  என்கிறார் கராத். கராத்,” நான் இப்போது BPCL ZONAL OFFICE MANMAD –ல் இருக்கிறேன்என்றாராம். மோட்டார் பைக் காரர், “நானே நேரில் அங்கு வந்து தருகிறேன்என்று சொல்லி விட்டாராம். DD அடையாளம் தெரிய BPCL-ல் DD கொடுக்கும்போது பின் பக்கம் போன் நம்பர் பென்சிலில் எழுதி தரவேண்டுமாம். அதை SBI –ல் DD எடுத்தவுடனே போன் நம்பரை எழுதிவிட்டார், கராத்.

பிறகு என்ன? DD வந்தது. officer DD பெற்றுக்கொண்டார். officer risk க்கிலிருந்து தப்பித்தார்.

கராத் உள் மனம் பேசியதாம் . “கராத், ஸ்வாமிஜி உன்னை மோட்டார் பைக்ல் 50 kms. வேகத்தில் போனால் போதும் என்று ஒரு முறை எச்சரித்தாரே. இன்று நீ 70 kms வேகத்தில் போனதால் தானே, ஜிப்பா மேல் பாக்கெட் ல் இருந்த DD காற்றில் உன்னையும் அறியாமல் பறந்து போனது. ஸ்வாமிஜி வார்த்தையை ஏன் மீறினாய்? ”
கராத்துக்கு கண்களில் தண்ணீர் வழிந்ததாம். சேஷ மந்திரம் சொல்லிக்கொண்டாராம். ஸ்வாமிஜிக்கு (நான்) நன்றி என்று மனதில் சொல்லிக்கொண்டாராம்.

நன்றி.வணக்கம்.

குருஜி .திருவண்ணாமலை.

01 .06 .2010

%d bloggers like this: