Category Archives: அஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன்

அஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன். முகாம்: மும்பை. வருடம்: 2005

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

அஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன். முகாம்: மும்பை. வருடம்: 2005.


அஹுஜா பஞ்சாபிக்காரர்(Punjabi). அவரின் 3 வயது குழந்தைக்கு 10 நாளைக்கு ஒரு முறை உடம்புக்கு காய்ச்சல் (fever) வந்து விடும். ஒரு முறை என்னை அணுகினார். பள்ளிக்கு (school) அடிக்கடி லீவு போடவேண்டியது அவசியமாகிறது. தாங்கள் தான் என் குழந்தையை (பெண்) காப்பாற்ற வேண்டும் . பல டாக்டர்களிடம் சென்றேன். பலனில்லை என்றார்.

மும்பை ulhaasnagar சென்றேன். அங்கே அவர் வீடு.
குழந்தையை தொட்டு ஆசீர்வதித்துக்கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி. அவதார் ஸ்ரீ சேஷனிடம் பிராத்தனை செய்தேன். இதற்கு என்ன பரிஹாரம்  என்று கேட்டேன்.

பர ப்ரமத்தின் (Para Brahma) (Seshadri) பதில்.

காலை வேளை (குழந்தை பால் சாப்பிடுவதற்கு 1 மணிநேரம் முன்பு)

அனுதினமும் 1 கரண்டி (tea spoon) இஞ்சி சாறும் (ginger extract) 1 கரண்டி தேனும் (honey) கலந்து குழந்தைக்கு, 90 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே என்று மட்டும் சொல்லி (200 தடவை), மருந்து கொடுக்க வேண்டும். “

பஞ்சாபிக்காரருக்கு, “ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே“, என்ற மஹா மந்திரத்தை (Live Manthra), உபதேசம் செய்தேன். மிக அழகாக திருப்பி சொன்னார் .

எனக்கு சந்தோஷமாக இருந்தது. தமிழ் நாட்டில் இப்படி மந்திர  உபதேசம் செய்தால், ஏன் சரணம் சேர்க்கக்கூடாது என்று கேட்பார்கள். நாக்கு குளறுகிறது. நான் சொல்லும் ஸ்லோகம் போதுமே என்றெல்லாம் விவாதம் என்னுடன் செய்வார்கள். மனம் லேசில் ஒத்துக்கொள்ளாது. EGO தான் காரணம்.


அஹுஜாவின் குரு பக்தி (பஞ்சாபிக்கு சீக்கிய மதம் குருவால் ஏற்பட்டதால்) அப்படியே ஏற்றுக்கொண்டது.

நானும், ஒரு குருவின் கடமைக்கு ஏற்ப, அந்த குழந்தையின் நலனுக்காக அனுதினமும் அவதார சிவ சேஷனிடம் பிராத்தனை செய்து வந்தேன். குரு தன் சிஷ்யர்களுக்காக  கண்டிப்பாக தினமும் பிராத்தனை செய்ய வேண்டும். குருசிஷ்ய முறையில் இது மிக அவசியம்.
குருசிஷ்ய  முறையில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியம்.
வாரம் ஒரு முறை அஹுஜா போன் (phone) செய்வார். குழந்தையின் நலன் பற்றி தெரிவிப்பார்.  10 நாட்கள் சென்றன. ஒரு நாள் காலை அஹுஜா
போன் (phone) செய்தார். “குருஜிக்கு நமஸ்காரம். தங்களின் ஆசீர்வாதத்தால், (குழந்தை பிறந்தது முதல் இன்று வரை ) முதல் தடவையாக 10 நாட்கள் சென்றும் காய்ச்சல் (fever) வரவில்லை. தாங்கள் சொன்னபடி மந்திரம் சொல்கிறேன்,” என்றார்.

மீண்டும் சேஷனிடம் அனுதினமும் பிராத்தனை. வாரா வாரம் போன் செய்து குழந்தையின் முன்னேற்றம் பற்றி தெரிவிப்பார். நானும் நம் சேஷனிடம் அவ்வப்போது தெரிவித்து, ஆசீர்வாதம் கேட்கவேண்டும். இது குருவுக்கும் பரமேஷ்டி & பராபர குருவுக்கும் (இரண்டும் நமக்கு சேஷனே-) இடையே நடக்கும் பரிவர்த்தனை. ஏன்? தெய்வமும் குருவும் அவரே-Incarnation of Shiva. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்.


ஒரு நாள் நான் இருக்கும் இடத்திற்கு வந்தார். “குருஜி, என் குழந்தை பரிபூரண குணம் அடைந்துவிட்டாள். நன்றியை தெரிவிக்க வார்த்தையில்லை. குருசிஷ்ய முறைப்படி தங்களுக்கு காணிக்கையை சமர்ப்பிக்கிறேன். தங்களை என் குடும்பம் என்றும் மறக்காது‘, என்று சொன்னார். உடன் சேஷ பிரமத்திற்கு நன்றி தெரிவித்தோம். (Thanksgiving an important in guru-shishya tradition) சேஷா நீதான் இந்த அற்புதத்திற்கு காரணம். நாங்களல்ல. நாங்கள், தாங்கள் நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே.)

குறிப்பு:

அவதார தெய்வம் சேஷ பெருமான் அற்புதங்கள் இன்றும் நடத்துகிறார். கலியுகத்தில் அநீதி, அக்கிரமம், மோசடி நிரம்பிவிட்டன. எப்போதெல்லாம் இவ்வாறு உலக நியதியில் மாற்றம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தெய்வம் மானிட ரூபத்தில் அவதாரம் எடுக்கிறார். அப்படி சிவனின் அவதாரம் தான் நம் சேஷ ப்ரஹ்மம். மக்களுக்கு இறை உணர்வை அற்புதங்கள் மூலம் நிகழ்திக்காட்டுகிறார்கள். இப்படி லக்ஷத்தில் ஒருவருக்கு கர்மவிதிப்படி அதிசயங்கள் நடக்கும். பேராசைப்படக்கூடாது. உடனே நடக்க வேண்டும் என்று  எண்ணக்கூடாது.
உலக நியதிக்கு ஆஸ்பத்ரிகள், டாக்டர்கள் மிக மிக அவசியம். அதை குருமார்களும் கட்டாயம்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு வருடம் கழித்து  வந்தார். குருஜி, “குழந்தை மிக நன்றாக இருக்கிறாள். ஒருவருடமாக fever இல்லை“,என்றார். மீண்டும் சிவ சேஷனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்தோம்.

Avathar Sri Seshadri Swamigal- an Incarnation of Lord shiva!


IS A GURU NECESSARY?


The Paramacharya of Kanchi Mutt explains:

When man prays directly to God the blessings which accrue are far less than what worship to a Guru would bring. When we worship God directly the power of that prayer, is minimal.

We do not know how to pray earnestly from the innermost depths of our heart. Also we pray for our own selves. When we pray thus, we ask God for our well being alone. It is not that HE will not lend an ear to these prayers. Yet by our limited power of worship, by which we pray for ourselves, how can we respond with any great blessing.

If we, on the other hand, believe that the Guru is all, then HE will intercede, praying to God on his disciple’s behalf feeling that he alone must do all for this child who entrusted his life to him. He is not like us, one who does know God. The strength of Guru’s prayer is very great.

He is one who lives in close proximity to that God who is so far away from our mind. When he prays and explains on our behalf with his superior power of worship then God has to listen.

The Guru has nothing to loose, whatever happens to us. Yet with extreme mercy, he guides us, strives to remove our impurities remaining blemishless at all times praying to God exclusively for us; the value of that is indeed supreme. If God will bless us in whatever small way for our efforts and worship, when the Guru prays for us HE will bless us completely.

We see this in our worldly life as well. If we need something done from a minister or Governor we can hardly approach them ourselves. The work is better accomplished if some one who is close to them is approached. Because of their recommendation the Governor does what has to be done without so much as a glance at us. We do not need to go to God, it is enough if we go to the Guru, who is capable of praying to God for us, far better than we ourselves can.”

Om

%d bloggers like this: