Category Archives: காணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது.

காணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

காணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது.
2006 .
நாசிக். (Nashik -192kms from Mumbai )

கராத் தாதா(Kharat Dhadha), Bharath Petroleum Corporation limited –ன் Retail out let (petrol & diesel) owner. நாசிக்கிலிருந்து 26kms தொலைவில் அந்த பெட்ரோல் ஸ்டேஷன் இருந்தது. அது அவதார் சேஷனின் அனுக்ரஹத்தால் 2005 ஜனவரியில்

chandori என்ற  கிராமத்தில் Ahmednagar -Shirdi ரோட்டில் உருவானது. ஷிர்டி
அங்கிருந்து 50kms.

தாதாவுக்கு என் மேல் அலாதியான பிரியம். சேஷனையும் என்னையும் ஒன்றாக பாவனை செய்துகொள்ளும் மன பக்குவம். ஆகவே என்னைப்பார்க்கும் போதெல்லாம்,”ஸ்வாமிஜிஎன்று அழைப்பார். மகான் மந்திரம் நன்றாக
உச்சரிப்பார். மராத்திக்காரர். படிப்பு 10 th class.

ஒருநாள் அவர் நண்பர் மூலம் ஒரு தகவல் எனக்கு அனுப்பினார். அந்த அற்புத லீலைகளை (அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்) இங்கு விவரமாக சொல்கிறேன்.

கராத் தாதா வாரம் இரண்டு முறை, பெட்ரோல் & டீஸல் Truck load எடுக்க

அங்கிருந்து 75 kms தொலைவில், Manmad என்ற ஊரில் உள்ள BPCL zonal office –க்கு செல்ல வேண்டும். Rs.3,75,000 DD கொடுத்தால், ஒரு truck load Diesel எடுத்து

செல்ல அனுமதி கொடுப்பார்கள். ஒரு நாள் diesel load எடுகக BPCL zonal office
சென்றார். sales bill ready . out pass ready . தன் ஜிப்பா பாக்கெட்ல் கைவிட்டு DD யை எடுகக நினைக்கிறார். னால் DD அங்கு இல்லை. காணாமல் போய்விட்டது.

கராத்துக்கு கவலை. “சேஷ மந்த்ரம்பலமுறை ஜெபித்து விட்டு என்னை நினைத்தாராம். Sales offcer ,”என்ன தேடுகிறாய்“? என்று கேட்டாராம். கராத், ” DD காணவில்லை. காலை 10.30க்கு, Nashik SBI –ல் Rs 3,75,000 க்கு DD எடுத்து ஜிப்பா மேல் பாக்கெட் ல் வைத்தேன். எப்படி காணாமல் போயிற்று என தெரியவில்லை என்று officer –ரிடம் சொன்னாராம். DD இல்லையென்றால், Diesel எடுத்து செல்ல முடியாது. ஆனால் Invoice Bill & out pass issue

பண்ணிவிட்டதால், Load எடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை.  Cancel செய்ய முடியாதாம். அங்கே சேஷன் தன் லீலையை officer மூலம் காட்டினார்.

Sales officer கராத்தை பார்த்து சொன்னாராம். “கவலைப் படாதே. நீ சொல்வது உண்மை. என்னுடைய Risk-ல், நீ load எடுத்துச்செல்ல அனுமதி தருகிறேன். நாளை DD கொடுத்து விடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, கராத் மொபைல் போன் மணியடிக்கிறது.

Hello” என்கிறார், கராத்.  Sir,” நான் nashik – manmad Road-ல் மோட்டார் பைக்ல்
வந்து கொண்டிருந்தேன். மெதுவாக வந்து கொண்டிருந்தேன். ரோடின் இடது பக்கம் கலர் கார்டு போல் ஒரு காகிதம் விழுந்து கிடந்தது. வண்டியை நிறுத்தி, அது என்ன என்று பார்த்தேன். SBI DD Rs. 3,75,000, favouring BPCL என்று இருந்தது. தற்செயலாக பின்புறம் திருப்பி பார்த்தேன். அதில் ஒரு மொபைல் போன் நம்பர் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பருக்கு  போன் செய்தேன். DDkku சொந்தக்காரர் தானே என்னோடு இப்ப பேசுவதுஎன்று கேட்கிறார். ஆம்  என்கிறார் கராத். கராத்,” நான் இப்போது BPCL ZONAL OFFICE MANMAD –ல் இருக்கிறேன்என்றாராம். மோட்டார் பைக் காரர், “நானே நேரில் அங்கு வந்து தருகிறேன்என்று சொல்லி விட்டாராம். DD அடையாளம் தெரிய BPCL-ல் DD கொடுக்கும்போது பின் பக்கம் போன் நம்பர் பென்சிலில் எழுதி தரவேண்டுமாம். அதை SBI –ல் DD எடுத்தவுடனே போன் நம்பரை எழுதிவிட்டார், கராத்.

பிறகு என்ன? DD வந்தது. officer DD பெற்றுக்கொண்டார். officer risk க்கிலிருந்து தப்பித்தார்.

கராத் உள் மனம் பேசியதாம் . “கராத், ஸ்வாமிஜி உன்னை மோட்டார் பைக்ல் 50 kms. வேகத்தில் போனால் போதும் என்று ஒரு முறை எச்சரித்தாரே. இன்று நீ 70 kms வேகத்தில் போனதால் தானே, ஜிப்பா மேல் பாக்கெட் ல் இருந்த DD காற்றில் உன்னையும் அறியாமல் பறந்து போனது. ஸ்வாமிஜி வார்த்தையை ஏன் மீறினாய்? ”
கராத்துக்கு கண்களில் தண்ணீர் வழிந்ததாம். சேஷ மந்திரம் சொல்லிக்கொண்டாராம். ஸ்வாமிஜிக்கு (நான்) நன்றி என்று மனதில் சொல்லிக்கொண்டாராம்.

நன்றி.வணக்கம்.

குருஜி .திருவண்ணாமலை.

01 .06 .2010

%d bloggers like this: