Category Archives: ரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன்

சென்னை ரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர், நம் சேஷன்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சென்னை ரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர், நம் சேஷன, 23ர்ட். ஆப்ரில், 2010.


வருஷம் நவம்பர் 2004 .

ரோஷனி அப்போது 8th standard படித்துக்கொண்டிருந்தாள்.

சென்னையில் அப்போது முகாம் (camp ). ரோஷனி , தீபாவளி பட்டாஸ் (crackers ) சத்தம் கேட்டால் மிகவும் பயந்து ,கட்டிலின் கீழே பதுங்கி விடுவாள். இது போல பல வருடங்களாக துன்பம். டாக்டர்களுக்கு அப்பாற்பட்ட விஷயமாகி விட்டது.

பெற்றோர்களுடன் என்னை வந்து பார்த்தாள். சிறிது நேரம் கண் மூடி நம் சேஷ பெருமானை நினைத்தேன். சிரித்துக்கொண்டே சேஷ ப்ரஹ்மம், “தெய்வீக வழிகளைச் சொன்னார். அதன் படி அவள் தலையில் கைவைத்து, சேஷ விபூதி தடவி நெடுநேரம், சேஷ மூல மந்திரம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். பிறகு, ரோஷனிக்கு, சேஷ மூல மந்திரம் உபதேசம் செய்தேன். ஏற்றுக்கொண்டாள். அவள் அப்பா விசுவாசத்துடன் சொன்னார். அவள் அம்மாவிடம் அதை எதிர் பார்க்க முடியவில்லை. பிறகு மும்பை மீண்டும் சென்று விட்டேன்.

2 மாதம் கழித்து, ரோஷனி அப்பா போனில் பேசினார். “சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, சுவாமி. விடாமல் இருவரும் சேஷ மந்திரம் சொல்கிறோம். முதல் தடவையாக நல்லது நடக்கிறது. வீட்டில் அடிக்கடி விபூதி, சந்தனம், இன்னும் பலவகையான நறுமணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகான் சேஷன் எங்களுடன் இருப்பதாக ஒரு உள்ளுணர்வு ஏற்படுகிறது. இது சரியா  என சொல்லுங்கள் சுவாமிஎன்று கேட்டார். அவதார புருஷர்களையும், சித்த புருஷர்களையும் நினைத்து, அவர்களின் மூல மந்திரம் ஓதும் போது, அவர்களாகவே, பக்தர்களின் வீட்டிற்கு சூக்ஷ்மத்தில் காற்றோடு காற்றாக கலந்து, நறுமணமாக, நம்மோடு உலா வருவார்கள் என விளக்கம் அளித்தேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார்.


ரோஷனிக்கு, படிப்படியாக சேஷ மந்திரம் உரு ஏற, ஏற, மன வலிமை (Wiil power) உண்டாகியது. 2005 –ம் வருஷம், அன்று தீபாவளி. ரோஷனி அம்மாவுக்கு மகான் மீது நம்பிக்கை இல்லை. மந்திரமும் சொல்வது கிடையாது. சந்தேகத்துடன் ரோஷனியை பார்த்துக்கொண்டிருந்து, “கட்டில் கீழே போய் படுத்துக்கொள். வெடி சத்தம் அதிகமாக கேட்கிறது“, என்றாராம்.

ரோஷனி அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்கிறாள் . அற்புதம் மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் நடத்தி விட்டார்கள். ரோஷனிக்கு நடுக்கம் முழுமையாக நீங்கி விட்டது. பல வருஷ தொல்லை நீங்கியது

ரோஷணியை மீண்டும் 10th std படிக்கும் போது சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. சேஷ மந்திரத்தின் மகிமையால் அவள் முகம் மிகவும் ஜொலித்தது. இறை சக்தியின் (Positive vibrations) வலிமையை அங்கு கண்டேன். புத்தி கூர்மை ஏற்பட்டு படிப்பிலும் அதிக மதிபெண்கள் கிடைத்தது.

Positive thinking always leads to Positive vibrations

இந்த நிகழ்வுகளை, ” 12 கட்டளைகள் ” (The Twelve Commandments) தலைப்பில் உள்ள அத்யாயத்துடன் (Chapter ) ஒப்பிடவும்.

https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/the-twelve-commandments/

%d bloggers like this: