Blog Archives

சீத்தாரமனின் வீட்டு மனை விற்க, சேஷன் விபூதியாக உருவெடுத்தார்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சீத்தாரமனின் வீட்டு மனை  விற்க, சேஷன் விபூதியாக உருவெடுத்தார்.


சீத்தாராமன் இலக்கியாமுடி திருத்தகம் (Hair cutting Saloon) உரிமையாளர். திருவண்ணாமலை கோரிமேடு பகுதியில் இருக்கிறார். சேஷ பக்தர் மற்றும் என் சிஷ்யர். சேஷ மந்திரம் வேலை செய்துகொண்டிருக்கும் போதும் சொல்லுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டார். ஏற்கனவே சேஷ மந்திரத்தின் சக்தியை அவதார்சேஷ பக்த சமாஜம்மூலம் ,தன்னுடைய அனுபவத்தை எழுதியுள்ளார். சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே என உணர்ந்தார்.

இப்போது சேஷனும் சேஷ விபூதியும் ஒன்றே என உணர்ந்தார்


திருவண்ணாமலை நகர எல்லையில் தேனி மலைஎன்ற இடத்தில் வீட்டு மனை 60 x30 சென்ற வருடம் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாக விற்க முயன்றார். முன் பணம் (advance) வாங்கிவிட்டார். ஆனால் விற்க முடியவில்லை. வாங்கிய பணத்தை சூழ் நிலையால் திருப்பிக் கொடுத்து விட்டார்.ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார்.

என்னிடம் ஒன்று விடாமல் சொன்னார். நானும், மனை விற்று விடும். சேஷ மந்திரம் நிறைய தடவை சொல், என்றேன். சரி என்று சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு மாதம் கழித்து வந்தார். என் மனதில் சேஷன் சொன்னது,” உடன் அவனுடன் சென்று, வீட்டு மனையில், விபூதியை தூவி விடு. விற்று விடும்“.

நானும்,”சீத்தாராமா, வா, உன் வீட்டு மனை பார்வையிட செல்லலாம்“, என்றேன். சீத்தாராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுப்பு எதுவும் சொல்லாமல் என்னை கூட்டிச்சென்றார். வீட்டு மனையில் சேஷ மந்திரம் ஓதிக்கொண்டே சேஷன் என்ற விபூதியை மனையில் பல இடங்களில் தூவினேன்.

15 நாள் சென்று சீத்தாராமன் மீண்டும் வந்தார். குருஜி, வீட்டு மனை வாங்க பார்ட்டி நேற்று வந்தார்கள். முன் பணம் வாங்கி விட்டேன்.

அவனை சோதனை செய்என்று சேஷன் கூற, நானும் அவ்வாறே செயல் பட்டேன்.

சீத்தாராமா,முன் பணம் வாங்கி விட்டாய்,மனை சேஷன் அருளால் விற்று விடும்.
விபூதி தூவி விட்டது ஞாபகம் இருக்கிறதா? என்றேன்.

குருஜி,ஏற்கனவே இது போல  முன் பணம் வாங்கி, திருப்பிக் கொடுத்து விட்டேன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் என்னிடம் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அது தான் சுய கௌரவம்” (EGO) என்பது. இறைவனே நேரில் வந்தாலும் மனம் ஒப்புக்கொள்ளாது. சேஷன் சொன்னபடி சோதனையை முடித்துக்கொண்டேன்.

சென்ற முறை சேஷனிடம் வீட்டு மனை விற்க கோரிக்கை என்னிடம் வைக்கவில்லை. அதனால் பணம் திருப்பிக்கொடுத்து விட்டாய். இந்த முறை அவ்வாறு நடக்க சேஷன் விட மாட்டார். ஏனென்றால், சேஷனே விபூதியாக மாறி(Positive Vibrations) உன் வீட்டு மனையில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) நீக்கி விட்டார். ஆகவே எளிதில் விற்று விடும் என்றேன்.

2 நாட்களில் மீண்டும் சீத்தாராமன் வந்தார். குருஜி, வீட்டு மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு பணம் முழுவதும் பெற்றுக்கொண்டேன், என்றார். வெளிப்படையாக மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது (EGO). ஆனால் உள் மனம் சேஷனின் அற்புதத்தை நினைத்து வரவேற்கிறது. எப்படி? இன்னமும் என்னை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிச்செல்கிறாரே ! சேஷ மந்திரமும் விடாமல் இன்று வரை  சொல்லி வருகிறாரே !

சேஷனை சரியாக புரிந்துகொள்ளாத பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் மட்டும்  ஒரு விளக்கம்.

சுய கெளரவம் ” (ஈகோ) நீங்கினால் இறைவனை(சேஷ ப்ரஹ்மம்சிவனின் அவதாரம்) உணரலாம். மூச்சு பயிற்சி, தியானம், யோகா பயிற்சி என்று எதுவும் தேவை இல்லை. சேஷ மந்திரம் மட்டும் விசுவாசத்துடன் சொன்னால் போதும். அப்படி சொல்லும் உண்மையான (true ) சேஷ பக்தர்கள் அதிகம் உண்டு. ஒரு உதாரணம் : சென்னையில் வசிக்கும் Professor. வேங்கட சுப்ரமணியன் , 1986 முதல் சேஷ பக்தர். சேஷனின் மீது எல்லையில்லா பற்று. தன் மகளுக்கு ,”சேஷ ப்ரியா என் பெயர் வைத்துள்ளார். சேஷ ப்ரியா, தற்போது M.B.A படித்துக்கொண்டிருக்கிறார்.

விளக்கம்.

1 . முதல் தடவை சீத்தா ராமன் முயற்சி எடுத்தார். அப்போது குரு அருள் இல்லை. காரியம் கைகூடவில்லை. வீட்டு மனையில் எதிர்மறை அதிர்வுகள் (Negative Vibrations) இருந்தன. அது அவருக்கு தெரியாதே !

2 . இரண்டாம் முறை குருவை அனுகினார். குரு அருள் , சேஷன் விபூதி வடிவம் எடுத்து, வீட்டு மனையில் உள்ள  குறையை நீக்கியது , சிஷ்யன் சீத்தாராமன் குரு மந்திரம் சொன்னது, வீட்டு மனை விற்க முயற்சி எடுத்தது, குரு சீத்தாராமனுக்காக, சேஷனிடம் மன்றாடியது (ஒரு வக்கீல், தன் கட்சிக்காரனுக்காக, சகல ஆதாரங்களைக்காட்டி, எப்படி நீதிபதியிடம் வாதாடுவாரோ) , ஆக அனைத்தும் ஒன்று  சேரும்போது,

3 . அவதார புருஷர் (சிவ சேஷன்) ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (நீதிபதி) , பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, மேற்படி முயற்ச்சிகளையும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, பக்தர்களுக்கு அநுக்ரகம் (Anugraham ) (Grace ) செய்கிறார்.

%d bloggers like this: