Blog Archives

மணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


ஸ்ரீ சேஷனின் லீலைகள் இன்றும்

மணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன்
முகாம் :மும்பை .வருடம் 2003 .

மணிலால் (45 வயது) மும்பை Ghatkopar (W)-ல்  தன் சொந்த சஹோதரருடன் canteen நடத்துகிறார். இரு சஹோதரரின் குடும்பங்களும் ராஜஸ்தான் மேவார் பகுதியில் வசிக்கிறார்கள். மணிலால் ஒருநாள் என்னுடன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.மணிலாலின் குறை என்ன?

மணிலால் கூறுகிறார். “ஸ்வாமி, என் மனைவியும்  மகளும் கடந்த ஆறு மாதமாக சாப்பாடு வாய் வழியாக செல்லமுடியாமல் அவதிப்படுகிறார்கள். திரவ உணவுதான். இதை தாங்கள் சரி செய்ய வேண்டும்“.

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் பிராத்தனை செய்கிறேன். சேஷா ப்ரமத்தின் தெய்வீக அருளுரை : மணிலாலுக்கு மந்திர உபதேசம் செய்ய சொன்னார்கள். மேலும் விபூதியில் தபஸ் வலிமையை செலுத்தி (Positive Vibrations) கொடுக்கச் சொன்னார்கள். வியாதி சரியாகிவிடும் என்றார்கள்.

அதே போல் செய்தேன். 10 நாட்களில் மணிலால் ராஜஸ்தான் சென்று விட்டதாக செய்தி எனக்கு கிடைத்தது. 2 நாட்கள் கழித்து
மீண்டும் ஒரு செய்தி .மணிலால் சேஷ மந்த்ரம் சொல்லிக்கொண்டே, விபூதியை மனைவிக்கும் மகளுக்கும் கொடுத்து ,வாயில் இட்டு தண்ணீர் குடிக்க சொன்னாராம். அவர்களும் அதே போல் செய்து விட்டார்களாம். அடுத்த நாள் காலை சப்பாத்தியை கஷ்டம் இல்லாமல் சாப்பிட்டார்களாம். பிறகு திட உணவு சாப்பிடுவதில் சிரமமே இல்லையாம்.

2 மாதங்கள் சென்று மணிலால் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
6
மாதங்களுக்கு ஒரு முறை போன் செய்து மந்த்ரம் சொல்ல சொல்வேன் .
அவரும் உடனே வெகு வேகமாக, ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே என்று மிக தெளிவாக சொல்வார். மனதுக்கு இனிமையாக இருக்கும். இன்றும் (ஏப்ரல் 2010 ) அவர் canteen –ல் மகானின் உருவ படம் மாட்டப்பட்டுள்ளது என்று மும்பை ஸ்ரீ .ராஜகோபால் எனக்கு தெரிவித்தார்கள். பிரச்சனையை மகான் முடித்து விட்டார், இனி எதற்கு? என்று எண்ணாமல் அனுதினமும் மகான் மந்த்ரம் சொல்லும் என் சிஷ்யனுக்கு  வாழ்த்துக்கள்.

சிஷ்யனின் முயற்ச்சியும், அவரின் மனைவியும் மகளும் மறுப்பு சொல்லாமல் சேஷ மந்த்ரம் சொல்லிக்கொண்டே விசுவாசத்துடன்  விபூதியை வாயில் இட்டு தண்ணீர் குடித்ததும், மறு நாள்  மன உறுதியுடன்  திட உணவு சாப்பிட்டதும் அவர்களின் குரு பக்தியையும், மந்த்ரம், விபூதி இரண்டையும் அவதார் சேஷனாக பாவித்தது  அவர்களின் இறை உணர்வினையையும்  வெளிப்படுத்துகிறது. Miracle
happened because of Manilal and his family’s FAITH & Trust on me and LORD SESHA.

அவதார புருஷர், சித்த புருஷர், சேஷ ப்ரஹ்மம் ,சிவ சேஷன், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். seshan: Incarnation of Shiva!

எல்லா புகழும் ஸ்ரீ சேஷனுக்கே! நாம் அவரால் நடத்தப்படுகிறோம்.

(Violet represents Cosmic energy.)

Advertisements
%d bloggers like this: