Blog Archives
ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2
ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
அப்போது நாகர்கோவிலில் குடியிருந்தேன். வாரம் இரண்டு நாட்கள்குடும்பத்துடன் தேரூரில் உள்ள ஶ்ரீ குரு மகாதேவ் ஆஷ்ரமம் சென்று விடுவேன்.
“கவிமணி” ஆஷ்ரமத்தில் “அழகிய மணவாள கணபதி” கோவில் உண்டு. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஶ்ரீ குரு மகாதேவுக்கு அன்றைய வயது சுமார் 70. பிரமச்சாரி. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். ஆஞ்சநேயர் சிலை ஐம் பொன்னால் ஆனது. சிறியது. ஆஞ்சநேயர் பஜனை நடக்கும். ஶ்ரீ குரு மகாதேவ் ஆஞ்சநேயராக மாறி வாக்கு சொல்வார்கள்.
1990 ம் ஆண்டு, என்னிடம், ஶ்ரீ குரு மகாதேவ் தன் விருப்பத்தை வெளியிட்டார்கள். ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி கட்டவேண்டும். கற்சிலையால் 3 to 3 1 /2 அடி உயரத்திற்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். ஆஷ்ரமத்தில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும். எல்லாம் 1 to 1.50 லக்ஷம் செலவு ஆகும்.ஏற்கனவே நீ, அடமானத்தில் இருந்த ஆஷ்ரமத்திற்குசொந்தமான 3 ஏக்கர் நன்செய் நிலத்தை Rs. 30, கொடுத்துமீட்டுவிட்டாய். அதற்கு நன்றி.
அது தவிர ஆஷ்ரம மாதந்திர மளிகை சாமான்களுக்கு Rs 3000 தருகிறாய். ஆஞ்சநேயர் கோவில் நீ தான் கட்ட வேண்டும். வேறு யார் யாரோ கேட்டார்கள். உனக்குத்தான் ஆஞ்சநேயர் அனுமதி கொடுத்தார். உன் குடும்பம் பிற்காலத்தில் செழிப்புடன் திகழும். நீ முடிவுசெய்து, எனக்கு சொல் என்றார்கள்.
குருவின் விருப்பமே என் முடிவு என்றேன்.
இதன் தொடர்ச்சி பகுதி-3 ல் …..
நன்றி.வணக்கம்.
குருஜி.திருவண்ணாமலை.