Blog Archives

Nashik – Naidu Sesha Leelaikal

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகலள் திருவடிக்கே

Sesha Paamaalai Header

பக்தர்களின் இதயமே,

பகவான் சேஷப்ரம்மத்தின் திருக்கோவில்!”

பகவான் சேஷப்ரம்மம்


2004. நாசிக் (Nashik – 192kms from Mumbai )12 வருடங்களுக்கு ஒரு முறை கும்ப மேளா நடக்கும் இடம்.) இந்தியாவில் நடக்கும் மூன்று கும்பமேள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

அங்கிருந்து 20 kms தொலைவில்(Trambakeshwar) த்ரம்பகேஷ்வர் (திரியம்பகேஷ்வர்). 12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்று .கோவிலின் பின்புறம் உள்ள  பிரம்ம கிரி மலையில் இருந்து கோதாவரி ஆறு உற்பத்தியாகி ஆந்திரா,ராஜமுந்திரியில் கடலில் கலக்கிறது. ராஜமுந்திரியில் என் குரு, ஸ்ரீ குரு மகாதேவுடன் 1990 ரிலும் , பிரம்மகிரியில் 2004 –ல் தனியாகவும் சென்று பார்த்தேன்.


நாசிக் நாயுடு வீட்டில், பத்து வருடகாலமாக உலாவிய ஆவியின் (bad spirit)
தொல்லையை நீக்கினார் நம் அவதார சிவ சேஷாத்ரி ஸ்வாமிகள்.

நாயுடு,  Nashik India security press- ல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியை கெட்ட ஆவி பிடித்திருந்தது. இரவில் கெட்ட ஸ்வப்னங்கள் (Dreams).அடிக்கடி நல்ல பாம்பு கொத்துவது போல. வீட்டில் நிம்மதி இல்லை.

பகல் நேரத்தில் சமையல் அறை (Kitchen) ஜன்னல் வழியாக நல்ல பாம்பு அடிக்கடி வந்து பயமுறுத்துமாம்.இது உண்மை,கனவல்ல. மரண பயம் வேறு. ஒரு மகள். ஒரு மகன்.

அவர் வீட்டில் சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹா  மந்த்ரம்(ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே) ஓதிக்கொண்டிருந்தோம்.

சேஷ சிவனின் (ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்) அருளுரை: முன்னோர்கள் சாபத்தினால் கெட்ட ஆவி பிடித்துள்ளது. அநு தினமும் 1000 தடவை சேஷ மந்த்ரம் சொல். உன்னை சரியாக்கிவிடுகிறேன். உன் வீடு சுபிக்ஷம் அடைந்தது விடும். உன் குழந்தைகளும்,உன் கணவரும் மந்த்ரம் சொல்லட்டும். அனைவருக்கும் நல்லது நடக்கும். விபூதியை வீடு, தோட்டம் மற்றும் எல்லா இடங்களிலும் தூவி விடு. எல்லோரும் தினமும் படுக்க செல்லுமுன் விபூதி நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்“.
வீட்டில் அனைவரும் சேஷனின் அருளுரையை பயபக்தியுடன் ஏற்றுக்கொண்டனர். அநு தினமும் நானும் என் பிராத்தனையை குரு என்ற முறையில் சொல்லிக்கொண்டிருந்தேன். (Twelve Commandments). 10 நாட்கள் சென்றன.

ஒரு நாள் நாசிக்கில் நான் தங்கியிருந்த இடத்திற்கு நாயுடு வந்தார். எனக்கு தன் பணிவான வணக்கம் தெரிவித்தார்.  10 வருடங்கள் தீராத பிரச்சனையை தீர்த்து விட்டீர்கள். நன்றி. மனைவிக்கு கெட்ட ஸ்வப்னங்கள் முற்றிலுமாக நின்று விட்டன. வீட்டில் சமையல் அறைக்கு பகல் நேரத்தில் நல்ல பாம்பு வருவதும் நின்று விட்டது. அனைவரும், தாங்கள் சொல்லியபடி மந்த்ரம் 1000 தடவை ஒவ்வொருவரும் சொன்னோம். அதில் உறுதியாக இருந்தோம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு நன்றி.

அந்த  குடும்பத்தில் அடுத்த ஒருவருடத்தில் மற்றொரு சம்பவமும் நடந்தது.
நாயுடு மகன் diploma in pharmacy படித்திருந்தான். மந்த்ரம் தினமும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு விடா முயற்ச்சியும் அதிகம். முயற்சி சேஷன் அருளுடன் திரு வினை ஆயிற்று. துபாயில் வேலை கிடைத்தது. ஒரு கெட்ட ஆவியினால் கஷ்டப்பட்ட குடும்பம் சேஷ மந்த்ரத்தால் நற் பலன் அடைந்தது.

குருவின் உபதேசத்தை (பேரறிவை(Universal mind ) சிற்றறிவால்(Knowledge -gross mind )) ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே பின்பற்றினார்கள். குரு உபதேசத்தில் தங்களுக்கு சாதகமானதை மட்டும் எடுத்து கொண்டு, மற்றதை விட்டு விடும் சிலரைப்போல் அல்லாமல், முழுவதுமாக ஏற்றுக்கொண்டதால், எனக்கு சேஷனிடம், சிஷ்யர்களுக்காக, பிராத்தனை செய்வது மிகவும் எளிதாயிற்று. மேலும் அந்த குடும்பத்தின் பூர்வ ஜன்ம நற்பலன் அதிகமாக இருந்ததால், சீக்கிரமாக நல்லது நடந்து விட்டது. எல்லாம் சேஷனின் செயல். நம் கையில் எதுவும் இல்லை.


%d bloggers like this: