Category Archives: கார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம்

சேஷ ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தால் கார்த்திக் M.B.B.S படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

கார்த்திக் M B B S ., படிப்புக்கு தன் முயற்ச்சியாலும், இறுதியில்  சேஷ ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தாலும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வருஷம்: 2001 . சென்னை.

கார்த்திக் 10th std படிக்கும்போதே, அவதார  புருஷர் , பிரம்மாண்ட நாயகர், மகான்களுக்கு மகான்,நம் சேஷ நாத பிரபு, கார்த்திக் பிற்காலத்தில் டாக்டர் ஆவார் என  ஆசீர்வதித்தார். கார்த்திக் பின்பு 12th std முடித்து MBBS நுழைவுத்தேர்வு எழுதினார். சராசரி (average ) மார்க் : 94 % (+2 exam )
அந்த வருஷம் MBBS entrance  cut off mark 92%.

கார்த்திக் பெற்றோர்கள் இருவரும்  டாக்டர்கள். மூவரும் சேஷ மந்திரம் நிறைய சொல்லுவார்கள். தினமும் சொல்வார்கள்.

நான் அப்போது திருவண்ணாமலையில் இருக்கிறேன். ஆகஸ்ட் முதல் வாரம். மாலை 3 மணிக்கு வழக்கம் போல் ஸ்ரீ ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் (Sri Ramanashramam) தியானம் செய்துவிட்டு 4 .30 க்கு வெளியே வந்தேன். ஒரு இன்ப அதிர்ச்சி. டாக்டர்கள் இருவரும் ,மற்றும், கார்த்திக், அவர் தங்கை ஸ்ருதி அனைவரும் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

குருஜி, கார்த்திக்கு MBBS Admission கிடைத்து விட்டது. இன்று காலையில் கோயம்புத்தூர் P.S.G.Medical College-ல், Govt. quota-வில் கிடைத்தது. அதுவும் கடைசி seat. இல்லையென்றால், பிறகு Management quota என்றால் capitation fees மட்டும் Rs. 20 lakhs. + annual fees per year Rs. 1,50,000 கட்ட வேண்டும். அப்படி நான்கு வருஷம் கட்ட வேண்டும். Govt quota வில் No capitation fees. ஒவ்வொரு வருஷமும் Rs. 75,000 மட்டும் கட்டினால் போதும்.சேஷ மந்திரத்தின் மகிமையே தனி!

சேஷ மந்திரம் சொன்னதால் Rs. 23 lakhs மிச்சப்படுத்தினார், நம் சேஷன் என்று மன நெகிழ்வுடன், நன்றி தெரிவித்தார்கள். அந்த வருஷம் கடுமையான போட்டி. மொத்தம் உள்ள 1150  govt quota seat-ல் கடைசி seat கார்த்திக்கு கிடைத்தது, அற்புதம் தானே!.


கடந்த மூன்று  வருடங்களாக சேஷ மந்திரம் விடாமல் சொன்னதாலும்,தங்களின் பிராத்தனையாலும், இந்த வெற்றி கிடைத்தது. 94 % மார்க் வாங்கியும் govt . quota வில் கடைசி seat கிடைத்தது  என்பது, சேஷனின் லீலையே, தவிர வேறொன்றுமில்லை.

தங்களுக்கு உடன் நன்றி தெரிவிக்கவே காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்தோம். யாரோ ஒருவர் , தாங்கள் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில்  தியானம் செய்து கொண்டிருப்பதாக சொன்னார். அதனால் இங்கு வந்தோம். 3 .30 மணிக்கே  வந்து நீங்கள் வெளியே வரும்  வரை காத்திருந்தோம். எல்லோரையும் ஆசீர்வாதம்  செய்யுங்கள் என்றார்கள்.

எல்லோரும் சேஷனுக்கு எங்களின் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்தோம். கார்த்திக்கின் கடின உழைப்பும், குருவின் வாக்கினை சிரமேற்கொண்டு , அனுதினமும் சேஷ மந்த்ரம் ஜெபித்து, சேஷனின் அனுக்ரஹத்தால் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துவிட்டார். பெற்றோர்களும் அனுதினமும் சேஷ மந்த்ரம் ஜெபித்தார்கள். குருவும், தன் வாக்கினை காப்பாற்ற, சேஷனிடம் அனுதினமும்  கார்த்திக்காக பிரார்த்தனை செய்தார்.