Category Archives: ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம்

ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2008. ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு
63
வயதில் வேலை கிடைத்த அற்புதம் – சேஷ லீலைகள்.


திருமதி. சியாமளா வைத்தியநாதன், திருச்சி அருகில் உள்ள அல்லூரில் வசிக்கிறார். மகானின் பக்தை. சேஷ மந்த்ரம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஒருமுறை மகானிடம் ஒரு விண்ணப்பம் செய்தார். அதாவது வேலை வேண்டும். கஷ்டமான வீட்டு சூழ்நிலை..


சேஷனின் வாக்கு: “ஹிந்தி டீச்சர் வேலை கிடைக்கும். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில்  முயற்சி செய்“.

ஒருவாரம் சென்றது. டீச்சர் முயற்சி செய்தார்.திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று  வேலை கேட்டார். 5 மாணவர்கள் ஹிந்தி கற்க ஆசைப்படுகிறார்கள். தற்போது ரூ 500 மாத சம்பளம் தருகிறோம். பிறகு மாணவர்கள் எண்ணிக்கை கூடும்போது சம்பளம் நிறைய தருகிறோம் என்று நிர்வாகத்தினர் சொன்னார்களாம்.

ஹிந்தி டீச்சர் என்னிடம் கேட்டார்கள். சேஷனின் லீலை எல்லாம் முதலில் சிறியதாக ஆரம்பித்து பின் படிப்படியாக பக்தரின் முன்வினைக்கு ஏற்றபடியும்,
சேஷனின் மூல மந்த்ரம் அநேக தடவை திருப்பி திருப்பி சொல்வதன் மூலமும், (மொட்டு மலராக சிறிது சிறிதாக விரிவது போல) சேஷன் நம் வினை பயனை மாற்றி பெரிது படுத்துவார். ஆகவே டீச்சர் பதவியை ஏற்று கொள்ளச்சொன்னேன்.

அவரும் முழு திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். சில மாதங்கள் கழிந்தன.
மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆக கூடியது. சம்பளம் ரூ 1000/ என உயர்ந்தது. அடுத்த சில மாதங்களில் மேலும் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இறுதியில் சம்பளம் ரூ. 2500/ ஆக உயர்ந்தது. காரண காரியம் ஆராய்ச்சி செய்யாமல் சேஷனின் வாக்கினை அப்படியே ஏற்று செயல் படுத்துவோர்க்கு எல்லாம் நன்மையாக முடியும்.

சேஷனின் வாக்கினில் தனக்கு சாதகமானதை ஏற்றுக்கொள்வதும், மற்றதை நிராகரிப்பதும் தவறாகும். நம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டால், தெய்வம் தேவையில்லையே. நமக்கு தெரியவில்லை, முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை,
இப்படி நேரும்போது தானே மகான்களை அணுகுகிறோம்? பிறகு என்ன?


அவர் வாக்கினை ஏற்று கொள்ளவேண்டியது தானே. என்ன தயக்கம்? ஒன்று அகந்தை (EGO). மற்றொன்று தான் எடுத்த  முடிவை மகானே நேரில் வந்து சொன்னாலும் ஏற்காத பிடிவாதம்.

ஒரு தாய்  தன் குழந்தைக்கு என்ன உணவு கொடுத்தால் ஜீரணமாகும் என்று நினைக்கிறாரோ,அதேபோல த்ரி கால ஞானியாம் சேஷனுக்கும் தன் பக்தனுக்கு எதைக்கொடுத்தால் நிலைத்து நிற்கும் என அறிந்து வாக்கு சொல்கிறார். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். தலை வலி பக்தனுக்கு தானே தவிர சேஷனுக்கு அல்லவே .

நன்றி.வணக்கம். குருஜி.

திருவண்ணாமலை. 05 .06 .2010 .