Category Archives: தாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம்.

தாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

தாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன்
2006
ம் வருடம் . மும்பை முகாம்.


தாரா 12 வயது  சிறுமி. குஜராத்தி. Bombay Hospital-ல் ICC ல் அனுமதிக்கப்பட்டிருந்தாள். டாக்டர்கள் மூளை காய்ச்சல் (Brain fever) என்று தீர்மானித்தார்கள். நம்பிக்கை கைவிடப்பட்ட நிலையில் ,அவள் அம்மாவின்  சினேகிதி (சேஷ பக்தை) எனக்கு போன் செய்து கேட்கிறார்கள்.

இன்னும் ஒரு வாரம் கூட தாங்காதுஎன்று டாக்டர்கள் சொல்வதாக பேசினார்கள்.

அவதார சேஷனிடம் முறையிட்டேன்.

சேஷன் சிவனன்றோ! அவர் diagnosis வித்தியாசமாக இருந்தது.

சேஷ ப்ரஹ்மம் என்னிடம் சொன்னார்கள். “தாரா அதிகமாக (ice-cream)சாப்பிட்டதால் இப்படி ஆனது. சில வகையான ice-cream-ல் பன்றிக் கொழுப்பு (pig tallow) சேர்ப்பார்கள். அதில் உள்ள கிருமிகள் brain tissues களை பாதித்து விடும்“, என்றார் நம் சேஷன்.

உடன் சேஷ பக்தையிடம் விபூதியில் சேஷ மந்த்ரம் ஜெபித்து (sanctified ash) கொடுத்தேன். தாராவின் நெற்றியில் பூசிவிட சொன்னேன். (சேஷன் சொன்னவாறு) தாராவின் நெற்றியில் டாக்டர் களுக்குத் தெரியாமல் விபூதி  பூசப்பட்டது.

தாராவின் அம்மாவும் மறுப்பு சொல்லாமல் விசுவாசத்துடன் சேஷ மந்த்ரம் 200 தரம் தினமும் சொன்னார்கள். (குஜராத்தியாக இருந்தாலும்) நானும் தாரா குணம் அடைய சேஷனிடம் அனுதினமும் பிராத்தனை  செய்தேன். தாராவின் அம்மா சேஷனின் diagnosis மிகவும் சரியானது என்று ஒப்புக் கொண்டார்கள். (அதாவது: தாரா நிறைய ice-cream சாப்பிடுவாள். )

மெல்ல மெல்ல  தாராவின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. “ஒரு வாரம் கூட தாங்காது “, என்று சொன்ன டாக்டர்கள், தாராவை ஒரு வாரத்தில் discharge- செய்து விட்டார்கள்.

இந்த சம்பவத்தை சேஷனின் லீலை (அற்புதம்) என்று நாம் என்ன வேண்டும். சேஷனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்தோம்.

லீலை எப்படி நடந்தது?


1.
தாராவுக்காக சேஷ பக்தை என்னை அணுகியது, தாராவின் அம்மாவுக்கு மன ஆறுதல் இக்கட்டான நிலைமையில்.

2. தாராவின் அம்மா குஜராத்தி. இதற்கு  முன் சேஷ மந்த்ரம் சொன்னதில்லை. ஆனால் சிநேகிதியின் மேல்  வைத்த நம்பிக்கையால், சேஷ மந்த்ரம் சொன்னது. விபூதியை  விசுவாசத்துடன்(ICC-ல் நுழைந்து)
தன் மகளின் நெற்றியில் தடவியது.

3. சேஷனின் diagnosis சரியே என்று (ஈகோ இல்லாமல் ) ஒப்புக்கொண்டது .

4. சிநேகிதியிடம் விபூதியை கொடுத்தது , சேஷ மந்த்ரத்தை ஜெபிக்க சொன்னது, சேஷ பக்தையின் குரு பக்தியை காட்டுகிறது. அவரின் தன்னலமற்ற சேவை மிக முக்கியமானது,பாராட்டுக்குரியது.

5. குருவாகிய நான் சேஷனிடம் தாரா குணம் ஆகும் வரை பிராத்தனை செய்தது.

ஆக இந்த 5 documentary evidence களை, குருவாகிய நான் சேஷ நீதிபதியிடம்  சமர்ப்பணம் செய்தேன்.

6. சேஷ நீதிபதி, தாராவின் கர்ம நியதிகளையும் (past karmic deeds), இத்துடன் (5 documentary evidence) ஒப்பிட்டு, நீதியை ,(தாராவை doctors ஒரு வாரத்தில் discharge செய்ய வைத்தது) தாராவிற்கு அனுகூலமாக (உயிர் பிழைக்க வைத்தது) வழங்கினார்கள். இது ஒரு கூட்டு பிராத்தனைக்கு சேஷன் வழங்கிய நீதி.

7. எல்லா புகழும் அவதார புருஷர்  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கே !