Blog Archives

05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


1991 June முதல் ஶ்ரீ குரு மகாதேவ் ஆணைப்படி, என் குடும்பத்தை  நாகர்கோவிலிலிருந்து கரூருக்கு மாற்றினேன் . கரூர் எனக்கு முற்றிலும் புதிய
ஊர். அங்கு குருவின் அனுக்ரகத்தால் ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் நேரில் வந்து பார்வையிட்டார். இது சிறிது காலம் தான் . பின் வேறு மாற்றம் ஏற்படும், அதை அப்போது சொல்கிறேன்என்றார்.

சில நாட்கள் தொழில்சாலையிலேயே தங்கிவிட்டார். பிராத்தனை மற்றும் தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.

தொழில் வெகு வேகமாக முன்னேறியது, குருவின் அனுக்ராகத்தால்.

வாரம் 2 முறை  நெரூர் சென்று 2 to 3 மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்வேன். தியானத்தின் உச்ச கட்டத்தில் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி உள்ளே இருந்து  வந்த சம்பக பூவின் வாசனையை அனுபவித்தேன்.


அப்போது ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள், மிகவும் மெதுவாக என்னோடு பேசுவது கேட்டது. “ராஜலிங்கம்,” உன் குடும்ப சோகம் நான் அறிவேன். அதனால் தான் உன் குரு என்னிடம் உன்னை அனுப்பியுள்ளார். கவலைப்படாதே.

உன் மனைவியின் மனநிலையை நான் சரி படுத்துகிறேன். சூன்யம் வைத்தோரை சுழல வைக்கிறேன். டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள். அவர்களால் உன் மனைவியை குணப்படுத்த முடியாது என்று தானே என்னிடம் வந்திருக்கிறாய்?
நல்லது. நம்பியவரை காத்திடுவான் சதாசிவம்என்று பேசினார்கள்.


குருவிடம் சொன்னேன். “சரிதான்என்றார்.

மனைவியும் மருந்து இல்லாமல் குணம் அடைந்து வந்தார்கள். தூக்க மாத்திரைகள் இல்லாமல் நன்றாக தூங்கினார்கள். எல்லாம் ஶ்ரீ குரு மகாதேவ் மற்றும் ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  இருவரின் அனுக்ராகத்தாலே (By grace only and not by blessings).

இப்படி 150 தடவைக்கு மேல்  கரூரிலிருந்து  நெரூர் (14kms ) சென்றேன்.

1992 டிசம்பர். ஒரு பெரிய திருப்பம். என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் மிகவும் அதிர்ச்சியான உண்மையை (Truth is always shocking and bitter in taste) வெளியிட்டார்கள். ராஜலிங்கம், ” தொழிசாலையை இன்றோடு மூடிவிடு, உன் தேவைக்கு, சொத்துக்களை விற்று, அதில் குடும்பம் நடத்து“. இனி என்னை பார்க்க  வரவேண்டாம். நீ பலரின் துன்பங்களை போக்க பிறவி எடுத்து வந்திருக்கிறாய். என்னைக்காட்டிலும் மிக உயர்ந்த
நிலைக்கு வருவாய். ஆகவே ஒரு நாள் நீ திருவண்ணாமலைக்கு செல். அங்கே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றிக்கொள். அதுவே உனக்கு நிரந்தரம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எனக்கு கனவில் காட்சி தந்துள்ளார்கள். அவரே உன் பராத்பர மற்றும் பரமேஷ்டி குரு ஆவார். மற்றும் ஒரு குரு, பரம குருவாக வருவார். ஏற்றுக்கொள்“.

இப்படி சொல்லிவிட்டு ஸ்ரீ குருமஹதேவ் தன் ஆஷ்ரமம் சென்று விட்டார்கள்.

இதன் தொடர்ச்சி பகுதி 6ல்


நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.

ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


தேரூர் (Theroor): ஶ்ரீ குரு மகாதேவ் (என் குரு)

நாகர்கோவில் தேரூர் 6 கி.மீ

(Nagerkovil to Theroor – 6 kms) Kanyakumari district


என் குருநாதர் ஶ்ரீ குரு மகாதேவ் (தத்தாத்ரேயர் குரு பரம்பரை) ஒரு பெரிய மகான். ஶ்ரீ வித்யா உபாசகர். ஶ்ரீ ஆஞ்சநேய உபாசகர். அம்பாள் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி உபாசகர். அவர் ஆஷ்ரமம் கன்னியாகுமரி மாவட்டம், சுசிந்தரம் தாணுமால்அயன் (அதாவது பிரம்மாவிஷ்ணுசிவன் ) கோவிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. “கவிமணி இல்லம் என்று பெயர். ஊர் பெயர் தேரூர்.அந்த ஊர் பறவைகள் சரணாலயம். பெரிய ஏரி (lake) உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் நெல் வயல்களே. சுற்றிலும் மலைகள்.இது ஒரு  அழகிய கிராமம். வாழை தோட்டங்கள் நிறைய உண்டு. சிறு குளங்கள் நிறைய உண்டு. கவிமணிபுத்தக சாலை அங்கு உண்டு. 10000 புத்தகங்கள் அடங்கியது.

குருவுக்கு 5 வருட சேவை செய்தேன். உடல் உழைப்பாலும்,மாதாந்திர  நிதி உதவி செய்தும், ஆஞ்சேநேய மூர்த்திக்கு  என் செலவில் கோவில் கட்டியும் (4th Feb. 1991), சத்குருவின் சத் சிஷ்யன் ஆனேன்.1987ஆகஸ்ட் 19 தேதி முதல் 1992 ஜூன் வரை சேவை செய்தேன். ஶ்ரீ குரு மகாதேவ் என் மேல் பிரியம் கொண்டு, என்னை, அவர் போலவே, ஆஞ்சநேய உபாசகர் ஆக்கினார். பின்பு படிப்படியாக நான் குருவின் துணையுடன் ஶ்ரீ வித்யா உபாசகர் ஆனேன். இது போதாது என்று என்னை அம்பாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உபாசகர் ஆக்கினார். இறைவனை உணர்ந்தேன். (self -realization )

நெரூர் (Nerur): ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்

(Sri Sadasiva Brehmendral)
(Sri Sadasiva Brehmendra Saraswathi)
சமாதி கோவில்.

சென்னை சேலம் 333 கி.மீ (Chennai to Salem 333kms)
பெங்களுரு சேலம் 210 கி.மீ (Bangalore to Salem 210 kms)
சேலம் கரூர் 100 கி.மீ (Salem to Karur 100kms)
கரூர் நெரூர் 14 கி.மீ (Karur to  Nerur 14kms)


ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்திராள்

ஜீவ சமாதி நுழைவு வாயில்.


ஶ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்


காவிரி ஆற்றுக்கு 1 /2 km தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜீவசமாதி. நாகலிங்க மரம், நாவல் மரம், பவழ மல்லி, மனோரஞ்சிதம், வேப்ப மரங்கள், சம்பக மரம், வில்வ மரம், மகிழ மரம், மாமரம் இன்னும் எத்தனையோ விருக்ஷங்கள்  தன்னுள் கொண்டது அந்த சமாதி பூமி. சுற்றிலும் வெளியே நெல் வயல்களும், கரும்பு காடுகளும், மஞ்சள் பயிரும், கோரை புற்களும் நிறைந்த மிக  அழகிய கிராமம் நெரூர். காவிரி ஆறு 1 கி.மீ அளவு விரிந்து ஓடிக்கொண்டிருக்கும். இத்தகைய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. குயில் குரலோசையும், பச்சைகிளியின் பாட்டும், மைனா, சிட்டுகுருவி, மரங்கொத்தி, மீன் கொத்தி, காக்கைகள் அங்குள்ள மரங்களில்  அமர்ந்து, தங்களுக்கு தோன்றியவாறு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பதை காண கண் கோடி வேண்டும். மிகவும் ரம்மியமான சூழல்நிலை. அப்போது பக்தர்கள்  தங்குவதற்கு இரண்டு அறைகள் மட்டுமே .

26
நவம்பர் 1989: பொன் எழுத்துக்களால் செதுக்க வேண்டிய நாள்.

அன்று காலை 7.30 மணிக்கு முதன் முறையாக (எனக்கு) என் குருநாதர் ஸ்ரீ குரு மகாதேவர் அவர்களுடன் ஸ்ரீ கைலாஷ் ஆஷ்ரம்என்று அழைக்கப்படும்  ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள்  சமாதி கோவிலுக்குள் காலடி வைக்கிறேன்.

ஸ்ரீ குருவுடன் காவிரி ஆற்றுக்கு நீராட செல்கிறேன். சூரிய நமஸ்காரம், காவிரி தாய் நமஸ்காரம், முடித்து விட்டு பகவான் சமாதிக்கு வந்தோம். பகவான் சமாதிக்கு நேர் என்னை அமர்ந்து கொள்ள சொன்னார், என் குருநாதர். என் முன்னே அவர் அமர்ந்து கொண்டார். ஒரு பெரிய தாம்பாளத்தில், நான் கொண்டு வந்திருந்த பூ, பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய், வஸ்திரம், இவைகளை வைக்க சொன்னார். சொன்னபடி செய்தேன்.குரு தக்ஷிணை வைத்து, சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன்.


அன்று ஸ்ரீ குரு மகாதேவ் மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டார். இன்று முதல் நீ குரு ஸ்தானத்திற்கு தகுதி பெற்று விட்டாய் என்றார். உடன் என்னையே வெகு நேரம் உற்று பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு புரிந்து விட்டது. குருஜி எனக்கு நயன தீக்ஷைகொடுக்கிறார் என உணர்ந்தேன். உள்ளே ஊதா (violet rays) கதிர்கள் செல்வதை உணர்ந்தேன்.

பிரபஞ்ச நாயகன் சிவனின் அருவ நிலை (formless shape-Light rays) அல்லவா அது. புறத்திலும் என்னை சுற்றி ஊதா கதிர்கள் சூழ்ந்து கொண்டன. அதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. குருவின் மகிமை அன்றோ அது. சிவன் குரு வடிவில் வந்தார்.

10
நிமிடம் கடந்தது, இப்படியே. என்னை கட்டிப் பிடித்துக்கொண்டார். இனி உனக்கு, “ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள்என குரு பட்டம் தருகிறேன். பிற்காலத்தில், ” உன்னை எல்லோரும் சத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள்என அழைக்கட்டும், என்று உணர்ச்சி ததும்ப அருளினார்கள். என்னைக்காட்டிலும், நீ மிக உயர்ந்த நிலைக்கு வருவாய். அப்போது நான் சமாதி ஆகிவிடுவேன், என்றார். இதற்குதான் குருவை மிஞ்சிய சிஷ்யன்என்று பெயர் என விளக்கம் அளித்தார்கள்.

அன்று மாலை குரு ஆஷ்ரமத்திற்கு பறப்பட்டு விட்டோம் .

இதன் தொடர்ச்சி பகுதி-2 ல் ….


நன்றி . வணக்கம். குருஜி. 22 .05 .2010 .திருவண்ணாமலை.